தல '61'... மூன்றாவது முறையாக பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித்?

By manimegalai aFirst Published Mar 22, 2020, 2:07 PM IST
Highlights

தல அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், தன்னுடைய 60 ஆவது படமான  'வலிமை' படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக பெண் இயக்குனர்... சுதா கொங்கரா  இயக்கத்தில் 61 ஆவது படத்தை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 

தல அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், தன்னுடைய 60 ஆவது படமான  'வலிமை' படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக பெண் இயக்குனர்... சுதா கொங்கரா  இயக்கத்தில் 61 ஆவது படத்தை நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கோலிவுட் திரையுலகில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான, 'விஸ்வாசம் ', மற்றும் 'நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து.

நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தன்னுடைய 61 ஆவது படத்தை, 'இறுதி சுற்று', மற்றும் 'சூரரை போற்று' ஆகிய படங்களை இயக்கிய, சுதா கொங்கரா இயக்கத்தில், நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த தகவல் உண்மையானால் தல அஜித் மூன்றாவது முறையாக பெண் இயக்குனர் இயக்கத்தில் இணைந்து  நடிக்க உள்ளார். ஏற்கனவே...இயக்குனர் சுஷ்மா அகுஜா  இயக்கத்தில் 'உயிரோடு உயிராக', கௌரி ஷிண்டே இயக்கத்தில் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் சுதா கொங்கரா  இயக்கிய 'சூரரை போற்று' திரைப்படம் வெளியாக உள்ளது.

click me!