ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானை அவமதித்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா..! வரிந்து கட்டும் ரசிகர்கள்..!

Published : Jul 21, 2021, 10:33 AM IST
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானை அவமதித்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா..! வரிந்து கட்டும் ரசிகர்கள்..!

சுருக்கம்

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்று தனக்குத் தெரியாது என்றும்,  இந்தியாவின் மிக உயர்ந்த விருதான மதிப்புமிக்க பாரத ரத்னாவை அவமதிக்கும் வகையிலும் பேசியுள்ளார், பிரபல நடிகரும் - அரசியல் வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா. 

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரச்சனைகளில் சிக்கும் பிரபல நடிகரும் - அரசியல் வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணா, அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், திரைபிரபலங்களுக்கு வழங்க கூடிய மிக உயரிய விருதுகளில் ஒன்றான ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்று தனக்குத் தெரியாது என்றும்,  இந்தியாவின் மிக உயர்ந்த விருதான மதிப்புமிக்க, பாரத ரத்னாவை அவமதிக்கும் வகையிலும் பேசியுள்ளார். 

நடிகர் பாலகிருஷ்ணாவின் இந்த சர்ச்சை பேச்சு குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "உள்ளூர் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், பாலகிருஷ்ணா, "இந்த விருதுகள் அனைத்தும் எனது காலுக்கு சமம் என்பது போல் பேசியுள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவுக்கு எனது குடும்பத்தின் பங்களிப்பை எந்த விருதும் ஈடுசெய்ய முடியாது. ஏ.ஆர்.ரஹ்மான் என்று அழைக்கப்படும் ஒருவர் ஆஸ்கார் விருதை வென்றவர் என்று கேள்விப்பட்டேன். ஆனால் அந்த ரஹ்மான் யார் என்று கூட எனக்கு தெரியாது. 

அதே போல் இந்திய அரசால் வழங்கப்படும் பாரத் ரத்னா விருது குறித்து... பாரத் ரத்னா என்.டி.ஆரின் கால் விரல் நகத்திற்கு சமம் என்று நினைக்கிறேன். என இவர் கூறியுள்ளது அனைத்து தரப்பினர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவையே ஆட்டி படைத்தது வரும் ஹீரோவாக இருந்தாலும், தன்னை போன்ற சக கலைஞனுக்கு பாலகிருஷ்ணா உரிய மரியாதை தர வேண்டும் என, ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வரிந்து கட்டி வருகிறார்கள்.

இதுகுறித்த வீடியோ இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாருக்கும் தெரியாமல் பிளான் பண்ணிய கார்த்திக் – ஷாக்கான சந்திரகலா; கார்த்திகை தீபம் சீரியல்!
கருவை கலைக்க துணிந்த ரோகிணி! ஜோதிடரின் முகத்திரையை கிழித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!