மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கு..! குஷ்பு டி.ஜி.பி-யை சந்தித்து பரபரப்பு புகார்..!

By manimegalai aFirst Published Jul 20, 2021, 6:41 PM IST
Highlights

நடிகையின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது மட்டும் இன்றி, அவருடைய பெயரை சில மர்ம நபர்கள் மாற்றி, அவர் ஏற்கனவே போட்ட பதிவுகளை நீங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நடிகையும் , பாஜக பிரமுகருமான குஷ்பு டிஜிபி-யை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.
 

நடிகையின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது மட்டும் இன்றி, அவருடைய பெயரை சில மர்ம நபர்கள் மாற்றி, அவர் ஏற்கனவே போட்ட பதிவுகளை நீங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நடிகையும் , பாஜக பிரமுகருமான குஷ்பு டிஜிபி-யை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.

அடிக்கடி பிரபலங்களின் சமூக வலைத்தளங்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்படுவது, தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஓரிரு முறை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலரால் முடக்க பட்டது.  இதுகுறித்து ஏற்கனவே ஆன்லைன் வழியாக சைபர் கிரைம் போலீசாரிடம் நடிகை குஷ்பு புகார் அளித்துள்ள நிலையில், இன்று மாலை, தமிழக டி.ஜி,பி சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தார்.

புகார் கொடுத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு... " தன்னுடைய ட்விட்டர் கணக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு அதில் தன்னுடைய பெயர் மாற்றப்பட்டது மட்டும் இன்றி, அதில் ஏற்கனவே பதிவிட பட்ட சில ட்விட்டர் பதிவுகளும் நீக்க பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத்திற்கும் புகார் கொடுக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவர்கள் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து சிலருக்கு தேவையற்ற மெசேஜ் மற்றும் புகைப்படங்கள் அனுப்பப்பட்டதாக ட்விட்டர் நிர்வாகத்தினர் கூறினர். இதனால் தன்னுடைய ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து முறைகேடான விஷயங்களை பதிவிட்டு, கலவரத்தை தூண்டும் வகையில் மர்ம நபர்கள் செயல்படுவார்களோ என்கிற பயத்தால் தற்போது டிஜிபி-ஐ சந்தித்து புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலாதித்த குஷ்பு ஆளுநர் நியமனத்தில் இடம் எதிர்பார்ப்பீர்களா? என்ற கேள்விக்கு இன்னும் அதற்கான வயது தனக்கு வர வில்லை என்று கூறினார். மேலும் தமிழக பாஜக தலைவராக, அண்ணாமலை அவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் தனக்கு மகிழ்ச்சி என கூறினார். 
 

click me!