உருவாகிறது சுந்தரா டிராவல்ஸ் 2 ...! முரளி - வடிவேலு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது இவர்களா ஷாக் ஆகிடாதீங்க?

Published : Jul 20, 2021, 03:28 PM IST
உருவாகிறது சுந்தரா டிராவல்ஸ் 2 ...! முரளி - வடிவேலு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது இவர்களா ஷாக் ஆகிடாதீங்க?

சுருக்கம்

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற காமெடி திரைப்படமான, 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் முரளி - வடிவேலு கெட்டப்பில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்தும் தகவல் கசிந்துள்ளது.  

கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற காமெடி திரைப்படமான, 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் முரளி - வடிவேலு கெட்டப்பில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்தும் தகவல் கசிந்துள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் அசோகன், மலையாளத்தில் எடுத்து வெற்றி பெற்ற, Ee Parakkum Thalika என்கிற படத்தை, தமிழில் சுந்தரா டிராவல்ஸ் என்கிற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார். 2002 ஆண்டு வெளியான இப்படம், தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதில் ஹீரோ முரளி மற்றும் காமெடியன் வடிவேலுவின் காம்பினேஷன், வினு சக்ரவர்த்தியின் காமெடி காட்சிகள் வேற லெவலில் இருந்தது. இந்த படத்தை யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 19 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் தற்போது வரை வெளியாகாத நிலையில் இந்த படத்தில் முரளி மற்றும் வடிவேலு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

முரளி நடித்த கதாபாத்திரத்தில் பல படங்களில் காமெடியனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ள கருணாகரன் நடிக்க உள்ளதாகவும், வடிவேலு கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நெட்டிசன்கள் பலர், " தற்போது வரை காமெடி படம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வரும் படமாக இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து விஷப்பரீச்சை செய்ய வேண்டாம்... சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கும் முயற்சியும் அது போன்றது தான்... என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து இதுவரை அதிகார பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், இந்த படம் எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!