ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் அதிரடி கைது..!

By manimegalai aFirst Published Jul 20, 2021, 12:06 PM IST
Highlights

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவர் புகார் கொடுத்ததன் பெயரில், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவர் புகார் கொடுத்ததன் பெயரில், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா (45 ), பெண்களை வைத்து ஆபாச படங்களை உருவாக்கி... அதனை அவரது செயலியில் வெளியிட்டு வந்துள்ளார். இது குறித்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று அதாவது (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டார். 

இதுகுறித்து மும்பை போலீஸ் கமிஷ்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... "பிப்ரவரி 2021 இல் குற்றப்பிரிவில்... மும்பையில் சிலர் ஆபாசப் படங்களை உருவாக்கி அதனை செயலிகள் மூலம்  மூலம் வெளியிடுவது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவை 19/7/21 அன்று கைது செய்துள்ளோம், ஏனெனில் அவர் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இது தொடர்பாக எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளது. என்று மும்பை போலீஸ் கமிஷனர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்".

தற்போது ராஜ் குந்த்ரா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதற்க்கு முன், நடிகை மற்றும் வேறு சில நபர்கள் குற்றம் சாட்டப்பட்ட ஆபாச படங்கள் தொடர்பான வழக்குகளை பதிவு செய்து விசாரணை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் தற்போது குந்த்ரா மீது ஐபிசி பிரிவுகள் 420 (மோசடி), 34 (பொது நோக்கம்), 292 மற்றும் 293 (ஆபாசமான மற்றும் அநாகரீகமான விளம்பரங்கள் மற்றும் காட்சிகள் வெளியிட்டது), மற்றும் ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் பெண்களின் அநாகரிக பிரதிநிதித்துவம் (தடை) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆபாசப் படங்களைத் தயாரிப்பது தொடர்பான வழக்கில் குந்த்ரா உட்பட மொத்தம் 11 பேரை, குற்றப்பிரிவு கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை குந்த்ரா மும்பை காவல்துறையின் குற்றபிரிவு அதிகாரிகளால் ஜே.ஜே மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டு,  பின்னர் அவர் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!