பிரபல நடிகர் மரணம் ….. 250 படங்களுக்கு மேல் நடித்தவர் !!

By Selvanayagam PFirst Published Dec 13, 2019, 7:08 AM IST
Highlights

பிரபல தெலுங்கு நடிகர் மாருதி ராவ் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார், அவருக்கு வயது 80.

பழம் பெரும் தெலுங்கு நடிகர் மாருதி ராவ், வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலன்றி இறந்தார்.

1986-ல் தெலுங்கில் வெளியான சுவாதி முத்தியம் உள்பட தெலுங்கு பட உலகில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராவும், வில்லன் நடிகராகவும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி, திரை கதை வசனகர்த்தாவும் பன்முகத்தன்மை கொண்டிருந்தார்.

தேசிய விருதுகள் மற்றும் ஆந்திர அரசின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.மாருதிராவ் மறைவுக்கு தெலுங்கு பட உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

click me!