வெர்ஜின் பசங்களின் தலைவனுக்கு கைகொடுக்கும் தனுஷ்! ரசிகர்கள் உற்சாகம்...! 'ஆயிரம் ஜென்மங்கள்' படக்குழுவின் அடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பு!

Selvanayagam P   | others
Published : Dec 12, 2019, 10:44 PM IST
வெர்ஜின் பசங்களின் தலைவனுக்கு கைகொடுக்கும் தனுஷ்! ரசிகர்கள் உற்சாகம்...! 'ஆயிரம் ஜென்மங்கள்' படக்குழுவின் அடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பு!

சுருக்கம்

தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் வெர்ஜின் பசங்களின் தலைவனாக திகழும் ஜிவி பிரகாஷ் நடிப்பில், அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'ஆயிரம் ஜென்மங்கள்'. 

ஹாரர் ஃபேண்டஸி ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, கமர்ஷியல் இயக்குநர் எழில் இயக்கியுள்ளார். 
ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஈஷா ரெப்பா, நிகிஷா பட்டேல் என டபுள் ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 

அவர்களுடன் சதீஷ், பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு, சி.சத்யா இசையமைத்துள்ளார். 


மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'ஆயிரம் ஜென்மங்கள்' படம், வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகவுள்ளது. 

இதனையடுத்து, படத்தை விளம்பரப்படும் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. 
ஏற்கெனவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 

இதனால், ஆயிரம் ஜென்மங்கள் டிரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு உற்சாகத்தை தரும் வகையில், 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் டிரைலர் டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இந்த டிரைலரை, ஜிவி பிரகாஷின் நெருங்கிய நண்பரும், நடிகருமான தனுஷ், தனது டுவிட்டர் மூலமாக வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமா மானத்தை காப்பாற்றிய ரஜினி, பிரதீப்... இந்தியாவின் டாப் 10 படங்கள் பட்டியல் இதோ
கிரிஷ் நமக்கு வேண்டாம்... மீனாவின் முடிவால் ஷாக் ஆன முத்து - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்