நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு 144 போட்ட தமிழக அரசு...வெக்ஸ் ஆன விஷால்...

By Muthurama LingamFirst Published Nov 7, 2019, 12:55 PM IST
Highlights

அடுத்து தமிழக அரசின் கவனம் நடிகர் சங்கம் பக்கம் திரும்பியதில் அங்கும் தொடர்ந்து கருத்து மோதல்கள் நடந்து வந்தன. அடுத்து நடந்த தேர்தலில் விஷால் அணியும், ஐசரி கணேஷ் அணியும் மிகவும் மோசமாக கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். குறிப்பாக நடிகர் சங்கக் கட்டிட விவகாரம் அனைத்து சர்ச்சைகளிலும் முன்னிலை வகித்தது.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்குத் தடை வித்தித்து அங்கு ஒரு அரசு அதிகாரியை நியமித்தது போலவே நடிகர் சங்கத்துக்கும் ஒரு தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இனி அடுத்த அறிவிப்பு வரும் வரை சங்கப் பதவியில் இருப்பவர்கள் யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.

கடந்த ஆண்டு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த ரகளைத் தொடர்ந்து விஷால் மற்றும் இதர நிர்வாகிகளின் பதவிகள் முடக்கப்பட்டு தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். அடுத்து தமிழக அரசின் கவனம் நடிகர் சங்கம் பக்கம் திரும்பியதில் அங்கும் தொடர்ந்து கருத்து மோதல்கள் நடந்து வந்தன. அடுத்து நடந்த தேர்தலில் விஷால் அணியும், ஐசரி கணேஷ் அணியும் மிகவும் மோசமாக கருத்து மோதல்களில் ஈடுபட்டனர். குறிப்பாக நடிகர் சங்கக் கட்டிட விவகாரம் அனைத்து சர்ச்சைகளிலும் முன்னிலை வகித்தது.

அப்படி இரு தரப்பினரும் மோதிக்கொண்டதால் ஒருவர் மீது ஒருவர் வழக்குப் போட்டதால் தேர்தல் நடந்து முடிந்து 5 மாதங்கள் வரை ஆன நிலையிலும் இன்னும் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. இந்நிலையில் நேற்று நவம்பர் 6ம் தேதியிட்ட அரசு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் வருவாய்த்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பி.வி.கீதா இனி நடிகர் சங்கச் செயல்பாடுகளுக்கான சிறப்பு தனி அதிகாரியாகச் செயல்படுவார் என்றும் சங்கத் தேர்தலின் போது நடந்த மோதல்களை ஒட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தை முடக்கிவிட வேண்டாம் என்று சில தினங்களுக்கு முன்பு நடிகர் சங்க உறுப்பினர் ஒட்டுமொத்தமாக ஒரு கடிதம் அனுப்பிய நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் அரசு இப்படி ஒரு அதிரடியில் இறங்கியுள்ளதால் வெக்ஸ் ஆகிப்போயுள்ளார் விஷால்.

click me!