
இடை அழகில் மயக்கிய ராஷ்மிகா... பின்னாலேயே ஓடும் நிதின்... சோசியல் மீடியாவை தெறிக்கவிட்ட வீடியோ...!
மகாபாரதத்தில் பீஷ்மர் கதாபாத்திரம் பிரம்மச்சரிய சத்தியத்திற்கு பெயர் போனது. கல்யாணம் செய்து கொள்ளாமல் கடைசி வரை கட்ட பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர் பீஷ்மர். இந்நிலையில் தெலுங்கில் "பீஷ்மா" என்ற பெயரில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டிரெய்லர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கில் 'சாலோ' என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் வெங்கி குடுமுலா இந்த படத்தை இயக்கியுள்ளார். டோலிவுட்டின் முன்னணி நாயகனான நிதின் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தெலுங்கின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினான ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். சித்தாரா எண்டேர்டைன்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்ட 2 போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் செம வைரலானது. அதில் ராஷ்மிகாவின் இடுப்பை பிடிப்பை அள்ளாடும் நிதினின் போஸ்டர் செம ட்ரெண்டிங்கானது. அந்த போஸ்டருக்கு கிடைத்த ரெஸ்பான்ஸால் அதையே முதல் காட்சியாக வைத்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள First Glimpse யு-டியூப்பை தெறிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், ராஷ்மிகா மந்தானாவின் இடை அழகில் மயங்கிய நிதின், அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென அவர் பின்னாடியே சுத்துற மாதிரியான காட்சிகள் இடம் பெற்றிருக்கு. ஏற்கனவே 'கீத கோவிந்தம்' படத்தில ராஷ்மிகா தனது தொப்புள் அழகை காட்டுற 'இங்கிம், இங்கிம்' பாடம் சோசியல் மீடியாவில் வெற லெவலுக்கு ட்ரெண்டாச்சு. இதையடுத்து ராஷ்மிகா தன்னோடு இடை அழகை காட்டுற இந்த வீடியோவும் செம மாஸ் காட்டிக்கிட்டு இருக்கு. இந்த காட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், பெண்ணியவாதிகள் சிலர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மேலும் "பீஷ்மா"ன்னு படத்துக்கு பெயர் வைச்சிட்டு, ஹீரோயின் இடுப்பு புடிக்க ஹீரோ அழையுற மாதிரி சீன் வச்சியிருக்கீங்களேன்னும் சர்ச்சை கிளம்பியிருக்கு. ஆனால் யு-டியூப்பில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்காங்க. ரொமாண்டிக், ஆக்ஷன் உடன் தயாராகி வரும் பீஷ்மா படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.