இயக்குனர்கள் சங்க தேர்தல்.... பாக்யராஜ் அணியை வீழ்த்தி மீண்டும் தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

By Asianet Tamil cinema  |  First Published Feb 28, 2022, 6:21 AM IST

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கான தேர்தல் நேற்று அமைதியான முறையில் சென்னையில் நடந்து முடிந்தது. இதில் 1521 வாக்குகள் பதிவாகி இருந்தன.


தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில், தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைவந்ததால், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியும் களமிறங்கியது.

அதன்படி, கே.பாக்யராஜ் அணியில் அவர் தலைவராக போட்டியிட்டார். செயலாளர் பதவிக்கு ஆர்.பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட்பிரபு போட்டியிட்டனர். இந்த அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.மாதேஷ், எஸ். எழில் ஆகிய இருவரும், இணைச்செயலாளர்கள் பதவிக்கு ராஜா கார்த்திக், விருமாண்டி, ஜெகதீசன், ஜெனிபர் ஜூலியட் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆர்.பாண்டியராஜன், மங்கை அரிராஜன், வேல்முருகன், சசி, பாலசேகர், வி.பிரபாகர், சாய்ரமணி, நவீன், சிபி, நாகேந்திரன், ஜெகன் ஆகியோர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் போட்டியிட்டனர்.

Tap to resize

Latest Videos

அதேபோல் ஆர்.கே.செல்வமணி தலைவராக போட்டியிட்ட அணியில், செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளர்களாக சுந்தர்.சி, முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், மனோ பாலா, சரண், திருமலை, ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, ஆர்.கண்ணன், முத்து வடுகு, நம்பி, ரமேஷ் பிரபாகர், கிளாரா உட்பட 19 பேர் போட்டியிட்டனர். 

நேற்று நடைபெற்ற இந்த தேர்தலில் 1521 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் 955 வாக்குகளை பெற்று ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணி வெற்றி வாகை சூடியது. இதன்மூலம் இயக்குனர்கள் சங்க தேர்தலில் மீண்டும் தலைவராக தேர்வாகி உள்ளார் ஆர்.கே.செல்வமணி. இவரை எதிர்த்து போட்டியிட்ட கே.பாக்யராஜ் 566 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். 

click me!