
நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் பெரிய பட்ஜெட் படங்களான புஷ்பா, ஸ்பைடர்மேன் உள்ளிட்டவை ரிலீசாக உள்ளதால் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார்.
ஏற்கனவே தீபாவளிக்கு அண்ணாத்த படத்துக்கு போட்டியாக எனிமி படத்தை வெளியிட்ட விஷால், பொங்கலுக்கு அஜித்தின் வலிமை படத்துக்கு போட்டியாக ‘வீரமே வாகை சூடும்’ படத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் விஷால ‘வீரமே வாகை சூடும்’
பட ரிலீஸ் தேதி தள்ளிப்போனது..முன்னதாக இதிலிருந்து "தித்திக்கிறதே கண்கள்" என்னும் ரொமாண்டிக் சாங் வெளியாகி வைரலாகி வருகிறது. வீரமே வாகை சூடவா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஷால் பெண்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக வெற்றிபெறும் என கூறியிருந்தார்..
இந்நிலையில் வீரமே வாகை சூடவா படத்தின் ட்ரைலரை நாயகன் விஷால் தற்போது வெளியிட்டுள்ளார்...ஆக்ஷன்..எமோஷன் நிரம்பியுள்ளது இந்த ட்ரைலரில்..காவல்துறையில் பணிபுரியும் விஷால்..பெண்ணின் மீதான வன்முறை தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போராடும் கதைக்களத்தை இப்படம் கொண்டுள்ளது...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.