தமிழ் ராக்கர்ஸ்க்கு நேரடி சவால் விடும் எந்திரன் 2.0. அப்படி என்ன சவால் தெரியுமா?

 
Published : Oct 09, 2017, 09:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
தமிழ் ராக்கர்ஸ்க்கு நேரடி சவால் விடும் எந்திரன் 2.0. அப்படி என்ன சவால் தெரியுமா?

சுருக்கம்

Tamil rockers will be directly challenged by Endhiran 2.0. Do you know what the challenge is?

சூப்பர்ஸ்டார் நடிப்பில் தயாராகி வரும் படம் ஷங்கரின் 2.0. எந்திரன் படத்தின் 2-ஆம் பாகமான 2.0 படத்தை லைக்கா புரோடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், 2-வது மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட ரூ.450 கோடியை தொட்டுவிட்ட 2.0 படத்தின் பட்ஜெட் பாகுபலி படத்தின் சாதனைகளை முறியடிக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில், திருட்டுத்தனமாக புதுப்படங்களை வெளியிடும் இணையதளமான தமிழ் ராக்கர்ஸ்க்கு சவால் விடும் வகையில், படத்தை திருட்டுத் தனமாக வெளியாவதை தடுக்க இப்படத்தில் ஒரு புது முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது.

முதலில் 2.0 படத்தை 2-டி மற்றும் 3-டி ஆகிய வெர்ஷன்களில் திரையரங்குகளில் தன்மையைப் பொறுத்து வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது 3-டி வெர்ஷனில் மட்டுமே முதலில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதன் பிறகு ஓரிரு வாரங்கள் கழித்த பின்பு படம் 2-டி வெர்ஷனில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரண்டாவது மேக்கிங் வீடியோவும் 3-டியில் எப்படி உருவானது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த 3-டி வெர்ஷன் படத்தை திருட்டுத்தனமாக கேமராவில் பதிவு செய்து வெளியிட்டால் சரியான தரத்தில் பார்க்க முடியாது.

அப்படியே வெளியானாலும், அதனை ஆன்லைனிலோ அல்லது தொலைக்காட்சியிலோ படம் பார்ப்பவருக்கு தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கிடைக்கவே கிடைக்காது.

இப்போ எப்படி தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் படம் வெளியிடுது என்று பார்ப்போம் என்று 2.0 படக்குழு சவால் விட்டுள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சைலண்டாக ஓடிடியில் ரிலீஸ் ஆன பாகுபலி தி எபிக் திரைப்படம்... எந்த ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறது தெரியுமா?
தொட்டதெல்லாம் ஹிட்... 2025ம் ஆண்டு பற்றி ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி