
காந்த கண்களால் இளசுகளை சுண்டி இழுக்கும் பேரழகி ப்ரியா வாரியார் மீது தமிழ் பெண்கள் கொலைவெறியில் இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு தங்களின் ஆதங்கத்தை வெளிபடுத்துகின்றனர்.
கண்ணசைவில் ஒட்டு மொத்த தமிழ் பசங்களை கட்டிப்போட்ட ப்ரியா வாரியரை பார்த்து ஜொள்ளு வழிவது தமிழ் பெண்களுக்கு பிடிக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிமிக்கி கம்மல் ஷெரிலை கொஞ்ச நாட்கள் கொண்டாடித் தீர்த்தார்கள் தமிழ் பசங்க. அதன் பிறகு "ஒரு அடார் லவ்" நாயகி ப்ரியா வாரியரை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரு தினங்களாக வாட்ஸ் ஆப் ஃபேஸ்புக் எங்கும் காந்தக் கண்ணழகி, அகிலத்தை தன் கண்ணசைவால் கிறங்கடித்த பிரியா வாரியரின் புராணமாக பாடுகிறார்கள்.
அதேபோல நேற்று வெளியான மற்றொரு வீடியோவில் பிரியா வாரியார் தன்னுடைய காதலனுக்கு தனது இரண்டு விரல்களால் பிளையிங் கிஸ்ஸை துப்பாக்கி போல காதலனை நோக்கி முத்தம் கலந்து சுடுகிறாள். அவளது காதலனும் அவள் கொடுக்கும் முத்தத்தின் அழகை ரசித்துக் கொண்டே கீழே விழுவதைப்போல ஒரு வீடியோ வெளியாகி இளைஞர்களில் கனவை கலைப்பது போன்ற காந்தக் கண்ணழகால் கிறங்கடிக்கிறார்.
பிரியாவின் ப்ளையிங் கிஸ்ஸால் தமிழ் பசங்க எல்லோரும் ப்ரியா ப்ரியா என்று இரவும், பகலும் ஜொள்ளு விடுவதை பார்த்து தமிழ் பெண்கள் கொலைவெறியில் திரிகிறார்களாம். ப்ரியா வீடியோவை பார்த்துவிட்டு அதே போல தனக்கு பிடித்த பசங்களை கொக்கிப் போட்டு காதலில் கவிழ்க்க பிரியா வாரியர் மாதிரியே கண்ணசைக்க முயற்சி செய்து தோல்வி அடைந்துவிட்டார்களாம்... என்ன கொடுமைடா...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.