பிரண்ட்ஸ் பட குட்டி பையன் 'பரத் ஜெயந்த்' இப்போது எங்கே? என்ன செய்கிறார் தெரியுமா? 

 
Published : Feb 14, 2018, 04:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
பிரண்ட்ஸ் பட குட்டி பையன் 'பரத் ஜெயந்த்' இப்போது எங்கே? என்ன செய்கிறார் தெரியுமா? 

சுருக்கம்

friends movie child artist latest news

நடிகர் விஜய் மற்றும் சூர்யா நடத்து கடந்த 2001 ஆம் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த படத்தை இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்த படத்தில், ரமேஷ் கிருஷ்ணா, தேவயானி, மற்றும் விஜய லட்சுமி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

குழந்தை நட்சத்திரம் 'பரத் ஜெயந்த்'

இந்த படத்தில் இளையதளபதி விஜயின் சிறிய வயது கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் மாஸ்டர்  பரத் ஜெயந்த்.  1988 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் பள்ளியில் படிக்கும்போதே பல திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர்.

சிறிய வயதில் நடிப்பில் கலக்கிய இவர் தற்போது ஆளே இடம் தெரியாமல் போய் விட்டார். 

படிப்பு:

இவர், லயோலா கல்லூரியில் விஷ்வல் கம்யூனிகேசன் மற்றும் எம்.பி.ஏ படிப்பை முடித்தார். படிப்பில் கவனம் செலுத்த சிறிது காலம் நடிப்பிற்கு இடைவெளி விட்டு சென்ற இவர் அதன் பின்னர் மீண்டும் நடிக்க வரவில்லை.

துணை இயக்குனராக பரத்:

தற்போது இவர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அதரவா மற்றும் நயன்தாரா நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறாராம்.  

சிறிய வயதில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய இவர், தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் கார்த்தி, மற்றும் விஷால் பாணியில் துணை இயக்குனராக இருந்து பின் நடிக்க வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!