வறுமையில் வாடிய ரங்கம்மாள் பாட்டிக்கு ஓடிப்போய் உதவிய - தென்னிந்திய நடிகர் சங்கம் ! 

 
Published : Feb 14, 2018, 05:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
வறுமையில் வாடிய ரங்கம்மாள் பாட்டிக்கு ஓடிப்போய் உதவிய - தென்னிந்திய நடிகர் சங்கம் ! 

சுருக்கம்

nadigar sangam help the rangammaal patti

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் ரங்கம்மாள் பாட்டி. இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் 500 , 1000 ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். 

சில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று பரவி வந்தது. இந்த தகவல் அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள். அவரை பற்றி விசாரித்து மெரினா கடற்கரைக்கு பாட்டியை தேடி சென்றனர். அங்கே சென்ற போது தான் ரங்கம்மாள் பாட்டி பிச்சை எடுக்கவில்லை என்பதும். படபிடிப்பு தளத்தில் அவருக்கு கிடைத்த 500ருபாய் போதாததால் மெரினா கடற்கரையில் Ear Phones போன்ற Electronic பொருட்களை அங்கே விற்று அதன் மூலம் வரும் வருவாயை கொண்டு வாழ்கையை நடத்தி வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது

எனவே தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு உதவி தொகையாக ரூபாய் 5000 வழங்கியது. ரங்கம்மாள் பாட்டி FEFSI அமைப்பின் கீழ் உள்ள ஜூனியர் ஆர்டிஸ்ட் சங்கத்தின் உறுப்பினர். ஒருவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தால் மட்டும் தான் சங்கத்தின் மூலம் அவருக்கு உதவி தொகையை வழங்க முடியும். ஆனால் பாட்டியின் வறுமையை கருத்தில் கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு இந்த உதவியை செய்துள்ளது. மேலும் அவருக்கு எந்த வகையில் உதவலாம் என்பதை நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

இதை போன்று மருத்துவ உதவி இல்லாமல் தவித்துவந்த நடிகை பிந்துகோஷ்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ரூபாய் 5000 உதவி தொகையாக சென்ற வாரம் வழங்கியது. நடிகை பிந்துகோஷ் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் அல்ல. இருந்தாலும் அவரது தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அவரை உறுப்பினராக இலவசமாக சங்கத்தில் சேர்த்து இந்த உதவி தொகையை வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு ஓய்வூதியம் வழங்குவது பற்றியும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தளபதி ஃபேன்ஸ் ஆர் assemble: பரா சக்தி ஆனாலும் சரி ஓம் சக்தி ஆனாலும் சரி: ஒரு பேரே வரலாறு You Tube ரியாக்‌ஷன்!
உணவூட்டும் விவசாயத்திற்கு உயிர்யூட்டும் நந்தகுமார்; மண்ணைக் காக்க வந்த மாமனிதனின் சாதனைகள்!