விஜய் அவார்ட்ஸால் சினிமா சுதந்திரமே சாகிறது; நடிகர் சித்தார்த்தின் ஆவேசமான டிவிட்டர் பதிவு;

 
Published : May 22, 2018, 02:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
விஜய் அவார்ட்ஸால் சினிமா சுதந்திரமே சாகிறது; நடிகர் சித்தார்த்தின் ஆவேசமான டிவிட்டர் பதிவு;

சுருக்கம்

Tamil actor blamed famous television awards in twitter

விஜய் தொலைக்காட்சி இதுவரை 9 ஆண்டுகளாக, விஜய் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு 10ஆவது விஜய் அவார்ட்ஸ், விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் திரைப்படங்கள், ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் , காமெடியன் என ஒவ்வொரு துறையிலும் விஜய் தொலைக்காட்சி, தங்களுக்கு வேண்டியவர்களாக தேர்வு செய்து நாமினேட் செய்த்ருக்கிறது. என ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு போய்க்கொண்டிருக்கிறது.

மேலும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க, தகுதி உடையவர்களுக்கு மட்டுமே விருதுகளை அளிப்பதில்லை. எனும் ஒரு கருத்தும் திரைத்துறையினர் மத்தியில் நிலவி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் விஜய் அவார்ட்ஸ்-ஐ நேரடியாக தாக்கி பேசியிருக்கிறார்.

 

ஸ்டார் குழுமத்தை சேர்ந்த திரைப்படங்கள் இப்போது ரிலீசாகும் திரைப்படங்கள் மீது பெரிய அளவிலான ஆதிக்கத்தை செலுத்துகிறது. இசை உரிமை, தொலைக்காட்சி மற்றும் சாட்டிலைட் உரிமை, இணையத்தில் வீடியோ உரிமை என அனைத்தும் ஸ்டார் சினிமா ஆதிக்கத்திலேயே இருக்கிறது.

தற்போது விருது வழங்குவதிலும் அவர்களின் ஆதிக்கம், அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. கிரிக்கெட்டில் கூட ஐ.பி.எல்-க்கும் டெஸ்ட் மேச்-க்கும் வித்தியாசம் தெரிகிறது.

ஆனால் சினிமாவில் ஏன் அப்படி இல்லை? என கோபமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் சித்தார்த். இது  வெற்றிபெருபவர் கையில் தான் எல்லாம் இருக்கிறது என்பது போலாகிறது. இப்படியே போனால் சினிமா சுதந்திரம் என்பது இல்லாமலே போய்விடும் எனக்கூறியிருக்கிறார் சித்தார்த்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு