திருமணம் ஆன ஓரிரு ஆண்டுகளில் விவாகரத்து முடிவு எடுத்த பிரபல நடிகை...!

 
Published : May 22, 2018, 01:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
திருமணம் ஆன ஓரிரு ஆண்டுகளில் விவாகரத்து முடிவு எடுத்த பிரபல நடிகை...!

சுருக்கம்

famouse actress take decision for divource

சினிமா பிரபலங்கள் என்றாலே திருமணம் செய்துக்கொள்வதும், கணவரிடம் இருந்து விவாகரத்துப் பெறுவதும் மிகவும் சாதாரண விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது. ஆனால் இதனை தகர்த்து காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பலருக்கு உதாரணமாக வாழும் நட்சத்திரங்களும் இருக்கின்றனர். 

தற்போது கடந்த 2016 ஆம் ஆண்டு, பிரபல பாலிவுட் நடிகை பாபி டார்லிங் என்பவர் ,போபாலை சேர்ந்த ராம்னிக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 

பாபி டார்லிங் இந்தி படங்கள் மட்டும் இன்றி  பஞ்சாப் மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.

இந்நிலையில் திருமணம் ஆனது முதல் இவர்களுக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு நிலையில் அது பெரிதாகி, தற்போது பாபி தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார்.

இந்த விசாரணையில், பாபியை ராம்னிக் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், தினமும் குடித்து விட்டு வந்து ரத்தகாயம் ஏற்படுமளவுக்கு தாக்குவதாகவும், மேலும் பாபி சம்பாதித்த சொத்துக்களை அபகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் பாபி கொடுத்த புகாரின் அடிப்படையில்,  ராம்னிக்கை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர் தாக்கல் செய்த  ஜாமின் மனுவும்  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்