கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜூவாக டாப்சி..அடுத்த அதிரடி ரிலீஸ் தேதி இதோ

Kanmani P   | Asianet News
Published : Apr 29, 2022, 08:50 PM IST
கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜூவாக டாப்சி..அடுத்த அதிரடி ரிலீஸ் தேதி இதோ

சுருக்கம்

மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம் வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடுகளம் படத்தின்  மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. வெள்ளாவி வெச்சுதான் வெளுத்தங்களா ஏன்னு அளவிற்கு செக்கச்சிவந்த அழகை கொண்டவர் டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி என பன் மொழிகளில் முன்னணி நாயகியாக உள்ளார். இவர் சமீபத்தில் கேம் ஓவர், அனபெல்லா சேதுபதி உள்ளிட்ட ஹாரர் மூவிகளில் தோன்றியிருந்தார். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வேடத்தில் டாப்ஸி நடிக்கிறார். ஹிந்தி மொழியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார். வயாகாம்18 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியின் தற்போதைய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில்,டாப்ஸி பண்ணு டைட்டில் ரோலில் நடிக்கிறார். 

இந்த படத்தின் வெளியீட்டு தேதியை டாப்ஸி பண்ணு மற்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் ஷபாஷ் மிதுவின் அறிவித்தனர். படம் பற்றி பேசுகையில், மிதாலி ராஜி 8 வயது குழந்தையாக கனவுடன் இருக்கும் பயணத்தை இந்த படம் காட்டுவதாக கூறியுள்ளார். இந்த படம் வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!