இன்றிலிருந்து ஆட்டம் ஆரம்பம்... அப்பா டி.ராஜேந்தர் உடன் கைகோர்த்து களத்தில் குதித்த சிம்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 5, 2020, 4:23 PM IST
Highlights

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தோற்றதால் கடுப்பில் இருந்த இயக்குநர் டி.ராஜேந்தர் இன்று தனது தலையில் புதிய சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது அதிருப்தியில் இருந்த பாரதிராஜா தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தை சமீபத்தில் ஆரம்பித்தார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தோற்றதால் கடுப்பில் இருந்த இயக்குநர் டி.ராஜேந்தர் இன்று தனது தலையில் புதிய சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் அதனை தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் என அழைக்கின்றனர்.

 

இதையும் படிங்க: மெல்லிய வெள்ளை சட்டையில் மார்டன் தேவதையாய் நயன்தாரா... அட்டை படத்திற்காக நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்...!

அந்த சங்கத்தின் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் தலைவராக டி.ராஜேந்தர், செயலாளர்களாக  என்.சுபாஷ் சந்திர போஸ்  மற்றும் JSK.சதீஷ் குமார், பொருளாளராக கே.ராஜன். துணைத்தலைவர்களாக பி.டி.செல்வ குமார், சிங்கார வடிவேலன், கே.ஜி.பாண்டியன், இணை செயலாளர்களாக அசோக் சாம்ராஜ், சிகரம் சந்திரசேகர் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். மேலும் தயாரிப்பாளர்களுக்கு என்னவெல்லாம் செய்வோம் என்ற 5 அம்சங்களையும் அறிவித்துள்ளனர். 

 

இதையும் படிங்க: அர்ச்சனாவை தூக்கி அடிக்க வைல்ட்கார்ட் எண்ட்ரியாகும் தொகுப்பாளினி... கவர்ச்சி புயலை களம் இறக்கும் விஜய் டிவி!

அதன்படி, புதிய, சிறிய படத்தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி உருவாக்குவோம்,  VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவீனங்களை தவிர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம். திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கி தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடுவதற்கு வழிகாட்டுவோம்,  F.M.S, சாட்டிலைட், O.T.T. மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தை பெருக்கி லாபம் பெருக முயற்சி மேற்கொள்வோம்,  பட வெளியீட்டின் போது ஏற்படும் பல வித சிக்கல்களை, இயன்றவரை சுமுகமாக பேசி தீர்க்க ஆவண செய்வோம் என 5 விஷயங்களையும் டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான  உஷா ராஜேந்தர், STR பிக்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் இந்த சங்கத்தில் இணைய உள்ளனர். 

click me!