கொள்கையில் உறுதி... புதிய சங்கத்தின் தலைவர் பதவியை தூக்கியெறிந்த டி.ராஜேந்தர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 24, 2020, 3:29 PM IST
Highlights

எனவே, அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது அதிருப்தியில் இருந்த பாரதிராஜா தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தை சமீபத்தில் ஆரம்பித்தார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தோற்றதால் கடுப்பில் இருந்த இயக்குநர் டி.ராஜேந்தர்  புதிய சங்கம் ஒன்றை ஆரம்பித்தார்.  அதற்கு தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம் என பெயரிடப்பட்டது. தமிழில் அதனை தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கம் என அழைக்கின்றனர்.

கடந்த 12ம் தேதி அந்த அந்த சங்கத்தின் அறிமுக விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் தலைவராக டி.ராஜேந்தர், செயலாளராக ஜே.சதீஷ்குமார், பொருளாளராக கே.ராஜன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். அதன் பின்னர் க்யூப் கட்டண விவகாரம் தொடர்பாக  க்யூப் மற்றும் சர்வீஸ் புரொவைடர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய டி.ராஜேந்தர், சுமூக முடிவு எட்டப்படாததால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்தார். 

 புதிய சங்கம் ஆரம்பித்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், தலைவர் பதவியிலிருந்து டி.ராஜேந்தர் ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.இதுகுறித்து டி.ராஜேந்தர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பாரம்பரியமிக்க சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற டிசம்பர் 27-ம் தேதி காலை நடைபெற இருக்கிறது.

 

இதையும் படிங்க: சூர்யா, விஜய்சேதுபதியை அடுத்து ஜெயம் ரவி கொடுத்த ஷாக்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும், திரையுலகத்திற்கு இருக்கும் இந்த சோதனையான காலத்தில் தலைவராக நான் இருக்கும் இந்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும் கோரிக்கையும் தெரிவித்தனர். எனவே, அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன்.

 

இதையும் படிங்க: காதலி நயன்தாராவை அவசர அவசரமாக சென்னை அழைத்து வந்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் ஏர்போர்ட் போட்டோஸ்...!

எங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளகள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து புதிய தலைவரை சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி விரைவில் அறிவிக்கவுள்ளோம் என்று செயலாளர் ஜே.சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.

click me!