“நானும் ஆட்டத்தில் இருக்கேன்”... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டி.ராஜேந்தர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Oct 14, 2020, 2:19 PM IST
Highlights

இந்நிலையில் வர உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட உள்ளதாக டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். 

பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு டிசம்பர் 31ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு அதிகாரியான ஒய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நியமித்துள்ள உயர் நீதிமன்றம், தேர்தலை நடத்தி முடித்தது குறித்த அறிக்கையை ஜனவரி 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நவம்பர் 22ம் தேதி தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும்  இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்படும் அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கலை கல்லூரியில் காலை 8மணி முதல் மாலை 4மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

இதையும் படிங்க:பாவனா தான் இறந்துவிட்டாரே?... பிரபல நடிகரின் கொச்சை பேச்சால் கடுப்பான நடிகை பார்வதியின் அதிரடி முடிவு...!

ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணியோடு சேர்த்து 5 அணிகள் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. இதனிடையே ஏற்கனவே இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் சரியாக செயல்படவில்லை எனக்கூறி இயக்குநர் பாரதிராஜா தனியாக ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். 'தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்'  என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அந்த சங்கத்தில் 40க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க: 

இந்நிலையில் வர உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட உள்ளதாக டி.ராஜேந்தர் அறிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் டி.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார். தயாரிப்பாளர்களின் நலனுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை என்றும், தயாரிப்பாளர் நலனுக்காக குரல் கொடுத்து வரும் தான் வர உள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 

click me!