“அபராதம் விதிக்க நேரிடும்”... ரஜினிகாந்திற்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Oct 14, 2020, 12:50 PM IST
Highlights

அந்த மனுவில், மார்ச் 24 ம் தேதி முதல் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாததால் எந்த வருமானமும் இல்லை எனவே சொத்து வரி கேட்டு நிர்பந்திக்ககூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரையிலான சொத்து வரி செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இதையடுத்து ரூ.6.50 லட்சம் ரூபாய் சொத்து வரி செலுத்த வேண்டி உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் ராகவேந்திரா மண்டபத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், மார்ச் 24 ம் தேதி முதல் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாததால் எந்த வருமானமும் இல்லை எனவே சொத்து வரி கேட்டு நிர்பந்திக்ககூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. மேலும் சென்னை மாநகராட்சிக்கு கடந்த 23ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியும் இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ரஜினிகாந்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

இதையும் படிங்க: இது உடலா? உடையா?... உடலை இறுக்கி பிடித்திருக்கும் மெல்லிய உடையில் ரைசாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்....!

நோட்டீஸ் அனுப்பப்பட்டு 10 நாட்களில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள்... ஏன் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள். அத்துடன் இதற்கு மேலும் இப்படி நடந்து கொண்டால் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் நீதிபதி அனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதனையடுத்து ரஜினிகாந்த் தரப்பில் வழக்கைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. திரும்பப் பெறுவது தொடர்பான மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி இதுகுறித்து இன்று நீதிமன்ற வழக்குகளின் முடிவில் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.a

click me!