சுவிட்சர்லாந்தில் இருந்து பறந்து வரும் ஆதாரங்கள்... வசமாக சிக்கும் வைரமுத்து!

Published : Oct 10, 2018, 03:34 PM ISTUpdated : Oct 10, 2018, 04:30 PM IST
சுவிட்சர்லாந்தில் இருந்து பறந்து வரும் ஆதாரங்கள்... வசமாக சிக்கும் வைரமுத்து!

சுருக்கம்

காமப்பேரசுக்கு எதிரான சின்மயின் புகாருக்கு ஆதாரங்களை விழா ஏற்பாட்டாளர் அளிக்க தயாராக கூறியிருப்பது வைரமுத்து தரப்பினரை கதிகலங்க வைத்துள்ளது.

காமப்பேரசுக்கு எதிரான சின்மயின் புகாருக்கு ஆதாரங்களை விழா ஏற்பாட்டாளர் அளிக்க தயாராக கூறியிருப்பது வைரமுத்து தரப்பினரை கதிகலங்க வைத்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பல்வேறு துறைகளில் நடந்தாலும், திரைத்துறை மற்றும் இசைத்துறையில் பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடந்து வருவதை, அண்மை காலமாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் நாம் புரிந்து கொள்ளலாம். 

பொதுவாக பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்கள் துணிந்து வெளியே சொல்ல பயப்படுதல்; தன்மீது நிகழ்த்தப்பட்ட இந்த கொடுமையை வெளியே சொன்னால், தன்னைப்பற்றி இந்த சமூகம் என்ன நினைக்கும் என்ற அச்சத்தாலேயே வெளிப்படுத்தாமல் இதுப்பதே தொடர் பாலியல் குற்றங்களுக்கு அதுவும் ஒரு காரணமாக அமைகிறது. இந்த நிலையில், பின்னணி பாடகி சின்மயி, வைரமுத்துவுக்கு எதிராக நேரடியாக குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இதனால், பாதிக்கப்பட்ட பல குரல்கள் தற்போது வெளியே கேட்க ஆரம்பித்துள்ளன. 

வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி முன்வைத்த புகாரின் அடிப்படையில் பலர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூற அணி திரண்டு வருகின்றனர். பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது, கர்நாடக இசைக் கலைஞர் ஓ.எஸ்.தியாகராஜனிடம் இசை வகுப்புக்குச் சென்றபோது, தனதுக்கு நேர்ந்த கொடுமையை பெண் ஒருவர், சின்மயிடம் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் பெயரை வெளியிடாமல், அந்த சம்பவத்தையும் பாடகி சின்மயி பகிர்ந்துள்ளார். அதே நேரத்தில், சுவிட்சர்லாந்தில் நிகழ்ச்சி ஒன்றில் தனக்கேற்பட்ட சம்பவத்தையும் சின்மயி குறிப்பிட்டிருந்தார். 

வைரமுத்து குறித்து புகார்களையும் முன் வைத்திருந்தார். தற்போது சின்மயின் புகாருக்கான ஆதாரங்களை, விழா ஏற்பாட்டாளர் வழங்குவதாக கூறியுள்ளார். பாலியல் தொடர்பாக புகார்களை, பாதிக்கப்பட்டோர் கூறினாலும், குற்றம் சாட்டப்பட்டவர் குறித்த விவரங்கள் வெளியே வராது நின்று விடும் நிலை உள்ளது. அது மட்டுமல்லாது சில நாட்களிலேயே இந்த பிரச்சனை மறக்கடிக்கப்பட்டுவிடும். இதனால், பாதிக்கபட்டோர் நீதி பெறாமல் இருக்கும் நிலை இருந்து வந்துள்ளது.

இதுபோன்று நடக்கும் அபாயத்தை தடுக்கும் வகையில் பத்திரிகையாளர் சந்தியா மேனன், பாதிக்கப்பட்டவர்களை அணி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள், தேசிய பெண்கள் ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சந்தியாமேனனின் டுவிட்டை, ரீ-டிவிட் செய்துள்ள சின்மயி, அதற்கான செயல்முறைகளைக் கூறுங்கள்... இன்றே புகார் அளிக்கிறேன் என்று கூறியுள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு அதிலிருந்து தப்பித்து வந்தவர்கள் மீது சட்டரீதியான அணுகுமுறைகளுக்கு சென்றிருப்பதை பலர் வரவேற்கின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தி கோட் படம் பிடிக்கும்-பாகிஸ்தான் ரசிகை உருக்கம்: உலகளவில் டிரெண்டாகும் விஜய்யின் ஜன நாயகன்!
கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!