பாலியல் வழக்கிற்கு பயந்து தனது சிஷ்யை ரஞ்சிதாவுடன் வெளிநாட்டில் உள்ள தனித்தீவில் தலைமறைவாகி இருக்கிறார் சுவாமி நித்யானந்தா.
பாலியல் வழக்கிற்கு பயந்து தனது சிஷ்யை ரஞ்சிதாவுடன் வெளிநாட்டில் உள்ள தனித்தீவில் தலைமறைவாகி இருக்கிறார் சுவாமி நித்யானந்தா.
நித்யானந்தாவின் தலைமை பீடம் கர்நாடக மாநிலத்தில் ராம்நகர் மாவட்டம் பிடதியில் இருக்கிறது. அங்கு தனக்கு நித்யானந்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவருடைய சிஷ்யை ஆர்த்திராவ் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அந்த வழக்கு விசாரணை ராம்நகர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த நேரத்தில் தனது சிஷ்யை ரஞ்சிதாவுடன் சுவாமிகள் எஸ்கேப் ஆகி தனித்தீவில் தலைமறவாகி இருக்கிறார்.
எப்போதும் அழகுப் பெண்கள் புடை சூழ…தோசை சுடறதாகட்டும், நகைக் கண்காட்சி நடத்துவதாகட்டும், இட்ஸ் மீ…தட்ஸ் மீ…என்று பிரசங்கம் செய்வதாகட்டும்... நித்யானந்தா ஸ்டைலே வேறு! அவ்வப்போது பிரச்னைகள் எழும்போது அவர் எஸ்கேப் ஆகும் ஸ்டைலும் வேற லெவல்..!
பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு பிடதி நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜராகவில்லை. ஆர்த்திராவ் உள்ளிட்டோர் தந்த பலாத்கார வழக்கு பிடதி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக கடந்த ஜுன் மாதம் நித்தியானந்தா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், நித்யானந்தா ஒருமுறைகூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் ஆஜராகாததால் வழக்கு விசாரணை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நித்தியானந்தா கடந்த ஆறு மாதமாக எங்கிருக்கிறார் என்பதில் மர்மம் நீடித்தது. நித்தியானந்தா தலைமறைவாக இருந்தாலும் தினமும் யூ-டியூப் மூலம் பிரச்சாரம் செய்வதை விடவில்லை. ஆன்மீக பிரச்சாரத்தை எங்கிருந்து நித்தி செய்து வருகிறார் என்ற மர்மம் நீடிக்கிறது.
ஆனால், அவரது ஆசிரமத்தில் கேட்டால் நித்யானந்தா சதுரம்மாஸ்ய பூஜைக்காக வாரணாசி போய் இருப்பதாக கூறுகிறார்கள். நித்தியின் பாஸ்போர்ட்டை ஏற்கனவே நீதிமன்றம் முடக்கிவிட்டதால், அவர் வாரனாசியில் இருந்து நேபாளம் சென்று அங்கிருந்து கேமேன் தீவுகளுக்கு பறந்து விட்டதாகத் தெரிய வந்திருக்கிறது. கேமேன் ஐலேண்ட் என்பது கரீபியன் கடலில் இருக்கும் ஒரு குட்டி நாடு. நித்யானந்தாவைப் போலவே மிகவும் சுவாரசியமான நாடு அது! இன்றும் பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருக்கும் இந்த நாடு, ஸ்கூபா டைவிங், ஸ்னார்க்கல் போன்ற விளையாட்டுகளுக்கு மட்டுமல்ல சுவிச்சர்லாந்துக்கு அடுத்து கருப்பு பணம் பதுக்கப்படும் இடமும் இங்குதான்.
இந்தியாவிலிருந்து சமீபத்தில் ஓட்டம் பிடித்த விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்சி போன்ற பண முதலைகளும், நம்மூர் அரசியல்வாதிகளும் பதுக்கும் பணத்தை பாதுகாக்கும் நாடு. அங்குதான் நித்யானந்தா தனது நித்ய பூஜைகளை இப்போது ரஞ்சிதாவுடன் செய்து வருகிறார் என்கிறார்கள்.