இரண்டெழுத்து நாயகனுடன் நடிக்க மறுத்த நாயகி! உதாசீனப்படுத்திய நடிகர்!

Published : Dec 18, 2018, 04:10 PM IST
இரண்டெழுத்து நாயகனுடன் நடிக்க மறுத்த நாயகி! உதாசீனப்படுத்திய நடிகர்!

சுருக்கம்

குளிர்ச்சியான நடிகையை தனது படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக அவர் வீட்டுக்கே சென்றுள்ளார், ஒரு புது பட அதிபர். எடுத்ததுமே கதாநாயகன் யார் என்று கேட்டுள்ளார். இதற்கு 'சிவ'  நாயகனை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார் பட அதிபர்.

உடனே சம்மதம் சொன்னார் நடிகை. இந்த நிலையில் அந்த தயாரிப்பாளர் படத்தில் நடிப்பதற்கு தன்னிடம் தேதி இல்லை என்று கையை விரித்தார் சிவ நடிகர். அவருக்கு பதில் இரண்டு எழுத்து நாயகனை ஒப்பந்தம் செய்திருப்பதாக நடிகையிடம் சொன்னார் தயாரிப்பாளர். அதைக் கேட்டதும் நான் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விலகி விட்டாராம் அந்த குளிர்ச்சியான நடிகை.

சொந்தமாக படங்களை தயாரித்து வரும் அந்த நடிகர், புதிய படத்தில் மூன்றெழுத்து பிரபல நாயகியை ஒப்பந்தம் செய்ய சென்றார். "என் படங்கள் வரிசையாக தோல்வியை தழுவி வருகின்றன, அதனால் உடனடியாக ஒரு வெற்றி படத்தில் நடிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன் உங்கள் படத்தில் நடிக்க முடியாது என்று அந்த நடிகை கூற வருத்தத்துடன் திரும்பினார் தயாரிப்பாளர்  நடிகர்".

சில மாதங்கள் கழித்து அந்த நடிகையோ தயாரிப்பாளர் இயக்குனர் இயக்குனரை தேடி சென்றார். நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூற உங்களை வைத்து நான் படம்  எடுக்க நான் தயாராக இல்லை என்று உதாசீனப்படுத்தியுள்ளார் அந்த தயாரிப்பாளர் நடிகர்.

PREV
click me!

Recommended Stories

Anirudh : இப்போ காவ்யா மாறன்; இதற்கு முன் அனிருத் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய பிரபலங்கள் யார்?
அஜித் ஹீரா முதல் சிம்பு நயன் வரை; கோலிவுட்டில் புயலை கிளப்பிய காதல் ஜோடிகள் ஒரு பார்வை