முன்பெல்லாம் தமிழ்பட உலகிற்கு பெரும்பாலான கதாநாயகிகள் மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டார்கள். ஆனால் கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக மும்பை நடிகைகளின் இறக்குமதிகள் நிறுத்தப்பட்டன.
முன்பெல்லாம் தமிழ்பட உலகிற்கு பெரும்பாலான கதாநாயகிகள் மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டார்கள். ஆனால் கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக மும்பை நடிகைகளின் இறக்குமதிகள் நிறுத்தப்பட்டன.
மாறாக கேரளாவிலிருந்து நிறைய கதாநாயகிகள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். கேரள வரவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பு கிடைத்ததால், முன்னணி இடத்தை பிடித்ததும் கோடி கணக்கில் சம்பளம் கேட்க துவங்கி விட்டனர் கேரளத்து வரவுகள்.
அனால் மும்பை இறக்குமதிகள் அவ்வளவு பெரிய சம்பளத்தை கேட்டதில்லை, தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டார்கள். இதனால் தற்போது சில தயாரிப்பாளர்களின் பார்வை மும்பை நடிகைகள் மீது திரும்பியுள்ளது.
தயங்கும் தயாரிப்பாளர்:
அ.... என்ற எழுத்தில் துவங்கும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மூன்றெழுத்து நடிகர். இவர் நாயகனாக நடித்து எந்த படமும் வெற்றி பெறவில்லை. ஆனால் சம்பளம் மட்டும் ஒரு கோடி ரூபாய் வேண்டும் என கறாராக கூறுகிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். பெரிய சம்பளம் கேட்பதால் அந்த நடிகர் பக்கம் போக தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்களாம்.