27 வயது இளைஞனை கல்யாணம் பண்ணும் 42 வயதான உலக அழகி சுஷ்மிதா சென்...

Published : Nov 09, 2018, 10:37 AM IST
27 வயது இளைஞனை கல்யாணம் பண்ணும் 42 வயதான உலக அழகி சுஷ்மிதா சென்...

சுருக்கம்

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில், நாகர்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்திருந்தார். பின் முதல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சக்கலக்கா பேபி’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். 

பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில், நாகர்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்திருந்தார். பின் முதல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சக்கலக்கா பேபி’ பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். ஹைதராபாத்தில் பிறந்த இவர், இந்தியாவின் சார்பில் முதன்முதலாகப் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றவர்.

தற்போது இவருக்கு 42 வயதாகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ரெனீ, அலிசா என்ற இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சுஷ்மிதா, சில சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். நட்சத்திர ஓட்டல் அதிபர் ஒருவருடன் அவருக்குக் காதல் மலர்ந்து அவரைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர்.

இந்த நிலையில் சுஷ்மிதா சென் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ரோமன் ஷால் என்ற 27 வயது மாடலை காதலித்து வருகிறார். முதலில் கிசுகிசுவாக பரவிய இந்தத் தகவலை பின்னர் சுஸ்மிதாவே உறுதிப்படுத்தினார். இருவரும் தாஜ்மகாலுக்கு ஜோடியாக சென்று எடுத்துக்கொண்ட படத்தை சுஷ்மிதா தனது இன்ஸ்டகிராமில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தினார். படத்தின் கீழ், எனது வாழ்க்கையின் காதல் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவருக்கும் ரோமனுக்கும் 16 வயது வித்தியாசம் இருந்தாலும் இவர்கள், இப்போது திருமணத்துக்கு தயாராகி விட்டனர். இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சுஷ்மிதாவிடம் கேட்டுள்ளார் ரோமன். சுஷ்மிதாவும் அதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கு அவரது வளர்ப்பு மகள்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!