
வலுக்கட்டாயமான சமரசத்துக்கு இழுக்கப்பட்ட ‘சர்கார்’ படத்தின் மறு சென்சார் இன்று காலை 10 மணிக்கு அவசர அவசரமாக துவங்குகிறது. இந்த சென்சாரில் அ.தி.முக.வினர் விரும்பும் அனைத்து காட்சிகளும் வெட்டியெறியப்பட்ட பின்னர்தான் ‘சர்கார்’ காட்சிகள் மீண்டும் துவங்கும் என்று தெரிகிறது. இதை இன்று காலை பேட்டியளித்த சில தியேட்டர் அதிபர்கள் உறுதி செய்தனர்.
ஒரு விரல் புரட்சியே பாடலில் இலவச மிக்ஸி,கிரைண்டர்கள் எரிக்கப்படுவதில் தொடங்கி, வில்லி கேரக்டருக்கு ஜெ’வின் இயற்பெயரான கோமளவள்ளி என்ற பெயரை சூட்டியது மற்றும் சுமார் பத்து காட்சிகள் வரை இன்று வெட்டி எறியப்பட்டு இந்த மறு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இப்படி வெட்டப்பட்ட பின்னர் படத்தில் உயிரே இருக்காது என்று தெரிந்திருந்தும் படம் ஓடும் தியேட்டர்கள் சேதப்படுத்தப்படுவதால் வேறுவழியின்றி சன் பிக்ஷர்ஸ் நிறுவனம் இதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
இன்னொரு பக்கம் விஷயம் இவ்வளவு விபரீதமாகப் போன பிறகு குரல் கொடுத்த ரஜினி,கமல்,விஷால் போன்றவர்கள் ‘சர்கார்’ ரிலீஸான மறுநாளே, அதாவது சிறுசிறு எதிர்ப்புகள் வந்தபோதே தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தால் இவ்வளவு பெரிய பேராபத்திலிருந்து ஓரளவுக்காவது படத்தைக்காப்பாற்றியிருக்கமுடியும் என்று திரையுலக வட்டாரத்தில் ஒரு கருத்து நிலவுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.