’சர்கார்’க்கு கமல் சப்போர்ட்... அரசியல் வியாபாரிகள் விரைவில் ஒழிவார்கள் என்கிறார்

By sathish kFirst Published Nov 9, 2018, 9:16 AM IST
Highlights

நடிகர் விஜய்,முருகதாஸ் மற்றும் ‘சர்கார்’ படத்தைத்தயாரித்த சன் பிக்சர்ஸ் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து கமல் ட்விட் பண்ணியுள்ளார். ‘அரசியல் சூழ்ச்சிகளுக்கு சினிமாவை பலிகொடுக்கக்கூடாது’ என்று கடுமையாக ஆளும் அ.தி.மு.க.வை சாடியுள்ளார் கமல்.

நேற்று நள்ளிரவில் வெளியிட்டுள்ள ட்விட்டரில்...

 “முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்குப் புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப் போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதே அ.தி.மு.க. ஆட்சியில் ஜெ’ முதல்வராக இருந்தபோது ‘விஸ்வரூபம்’ படத்துக்கு இஸ்லாமியர்களின் எதிர்ப்பு இருப்பதாகக் கூறி ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்தனர். தற்போது அவர் இன்னும் முறையான அறிவிப்பே வெளியிடாத ‘தேவர் மகன் 2’ படத்துக்கும் பலத்த எதிர்ப்பு இருந்துவரும் நிலையில், இனி ஏறி அடித்தால்தான் அரசியல்வாதிகள் கொஞ்சமாவது அடங்குவார்கள் என்கிற கொதிப்பு கமலின் ட்வீட்டில் தெரிகிறது.

click me!