சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த் நடிக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு; இயக்குநர் யார் தெரியுமா?

 
Published : Dec 08, 2017, 10:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த் நடிக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு; இயக்குநர் யார் தெரியுமா?

சுருக்கம்

Sushindran Mishkin Vikranth act in a film titled as suttupidikka uththravu

இயக்குனர் சுசீந்திரன், இயக்குநர் மிஷ்கின் மற்றும் நடிகர் விக்ராந்த் நடிக்கும் படத்திற்கு "சுட்டுப்பிடிக்க உத்தரவு" என்று தலைப்பு வைத்துள்ளார் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான டைட்டில் வைப்பது, பெரிய பெரிய டைட்டில் வைப்பது, பேய் கதைகளை வைத்து படம் உருவாக்குவது, தாடி வித்தியாசமாக வைத்து நடிப்பது போன்றவை டிரெண்டாகி விட்டது.

உதாரணமாக விஜய் ஆண்டனி நடிக்கும் எமன், ஜிவியின் புரூஸ்லி, என் ஆளோட செருப்பக் காணோம் என்று வித்தியாசமாக டைட்டில் வைக்கும் டிரெண்ட் இருந்து வருகிறது.

தற்போது இயக்குனர் சுசீந்திரன், மிஷ்கின் மற்றும் விக்ராந்த் நடிக்கும் படத்திற்கு "சுட்டுப்பிடிக்க உத்தரவு" என்று தலைப்பு வைத்துள்ளனர்.

போக்கிரி ராஜா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் நடிப்பவர்கள் மற்றும் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில், சுசீந்திரன், மிஷ்கின் மற்றும் விக்ராந்த் படம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் படத்தை பி.கே. ராம் மோகன் தயாரிக்கிறார்.

வித்தியாசமான டைட்டிலுடன் சேர்ந்து வித்தியாசமான கதைக் கருவுடன் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது