
இணையத்தில் அதிகமாக தேடப்பட்ட இந்திய நடிகைகளில் முதல் பத்து இடங்களில் மலையாள நடிகை காவ்யா மாதவன் இடம்பெற்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
யாஹூ நிறுவனம் ஒவ்வோரு ஆண்டும் இணையத்தில் பிரபலமானவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அரசியல்வாதிகள், இசை பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் போன்றவர்கள் இந்த பட்டியலில் இடம் பெறுவார்கள்.
இதில் 2017ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் காவ்யா மாதவனுக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமாக வலம்வரும் அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட வேறெந்த நடிகையும் இந்தப் பட்டியலில் இடம்பெறாத நிலையில் காவ்யா மாதவன் இடம்பெற்றுள்ளார்..
காவ்யா மாதவன் மலையாளத் திரையுலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகையாக இருந்தாலும் அவரது நடிப்பில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளிவந்த ‘பின்னேயும்’ படத்துக்குப் பின் அவரது நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் அவர் இந்த பட்டியலில் இடம்பெற்றதற்கான காரணமாக நடிகை கடத்தல் வழக்கையே பலரும் காரணமாகக் கூறுகின்றனர்.
பிப்ரவரி 17ஆம் தேதி கேரளாவில் நடிகை ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளான வழக்கில் தனது கணவர் திலீப்புடன் சேர்ந்து அதிகமாக செய்திகளில் அடிபட்டவர் என்கிற வகையில் அதிக நபர்களால் காவ்யா மாதவன் இணையதளத்தில் தேடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை சன்னி லியோன், பிரியங்கா சோப்ரா மற்றும் ஐஸ்வர்யா ராய் பிடித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.