இறந்தது சசி கபூரா? ரிஷி கபூரா? பாவம் பிபிசி-யே கன்பியூஸ் ஆயிடுச்சு...

First Published Dec 7, 2017, 11:28 AM IST
Highlights
Sasi Kapoor? Rishi Kapoor? BBC Confucius


இந்தி திரைப்பட உலகின் முன்னாள் சூப்பர் ஸ்டாரான சசி கபூர் சில நாள்களுக்கு முன்பு மரணமடைந்தார். இது இந்திய திரையுலகினர் அனைவரையும் சோகத்திற்கு உள்ளாக்கியது.

79 வயதான பழம்பெரும் நடிகர் சசி கபூர் சில நாள்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மறைவிற்கு திரை உலகினர், அரசியல்வாதிகள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்தி திரையுலகில் இப்போதுதான் அனைவரும் வெவ்வேறு தலைமுடி ஸ்டைல், தாடி என புது புது கெட்டப்களில் உலா வருவதால் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால், 60-களில் அந்த மாதிரி அடையாளம் காணுவது மிக கடினம்.

எல்லாரும் ஒட்டவாரிய தலை முடி, கிளீன் ஷேவ், வெள்ளே வெள்ளேனு முகம் இப்படிதான் இருப்பாங்க. அவர்களில் இவர்தான் அந்த நடிகர் என்று  கண்டுபிடிப்பது மிக கடினம்.

அப்படி ஒரு நிலைமை உலகின் முன்னணி செய்தி நிறுவனமான பிபிசி-க்கும்  வந்திருக்கும் போல. ஆம்.

சசி கபூர் இறந்த செய்தியை பிபிசி ஆங்கில சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, சசி கபூர் இறந்த செய்தியில் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் ரிஷி கபூர் ஆகியோரின் படங்களைக் காட்டியுள்ளது. இது அமிதாப் மற்றும் ரிஷி கபூர் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

இதன்பின், ரசிகர்கள் பிபிசி சேனலை கண்டித்தும், கிண்டலடித்தும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, பிபிசி நிறுவனம் இந்தச் சம்பவத்திற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகது.

tags
click me!