’முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட்டுக்காக காத்திருப்பது கிரிமினல் வேஸ்ட்’! ஒரே நேரத்தில் 3 படங்களை முடித்த சுசீந்திரன்...

By sathish kFirst Published Oct 21, 2018, 10:51 AM IST
Highlights

‘இனி முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் எண்ணம் இல்லை. அவர்களுக்காக காத்திருப்பது கிரிமினல் வேஸ்ட். ஒருவருடம் காத்திருந்து அரும்பாடுபட்டு உருவாக்கிய கதையை, கதைகேட்க அமரும் அந்த ஒருமணிநேரத்தில் மாற்றங்கள் சொல்லி நம்மை கவிழ்த்தும் விடுவார்கள்’ என்கிறாராம் தொடர்ந்து புதுமுகங்களை வைத்து மூன்று படங்களை இயக்கிவரும் சுசீந்திரன்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜீனியஸ்' திரைப்படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சுசீந்திரன் இயக்கியுள்ள மற்றொரு படமான 'சாம்பியன்' படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். 

இவர்களோடு ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்ரகாஷ், ஆர்.கே சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக கே.ராகவி தயாரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

மேலும் சுசீந்திரன் இயக்கியுள்ள 'ஏஞ்சலினா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மூன்று படங்களிலுமே முன்னணி கதநாயகர்கள் ஒருவர்கூட இல்லை. ஏற்கனவே கார்த்தியை வைத்து ‘நாம் மகான் அல்ல’ விஷாலை வைத்து ‘பாண்டியநாடு’ படங்களை இயக்கிய சுசீந்திரன், குறிப்பாக விஷாலை மனதில் வைத்தே முன்னணி ஹீரோக்கள் குறித்து மேற்படி கமெண்ட் அடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

click me!