
2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் ". இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.
பலர் கலந்துக்கொண்ட இந்த விழாவில் விழாவில், படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் கார்த்தியின் அண்ணனுமான சூர்யா பேசியதாவது, கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிளிசரின் போடமால் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர். இது படத்தின் மீது நடிகர்களுக்கு அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும் தான் இப்படி சிறப்பாக நடிக்க முடியும் என்று கூறினார். மேலும் விரைவில் தம்பி கார்த்தியுடன் இணைந்து நடிப்பேன் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சூர்யா எப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும். அப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இப்படம் இவ்வளவு நடிகர்கள் பட்டாளத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது என்று கூறினார். மேலும் சத்யராஜ் மாமா நாங்கள் குழந்தையாக இருக்கும் போது அவர் வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வகைகளை வாங்கித்தந்தார். இப்போது சத்யராஜ் மாமா கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று கூறினார்.
இயக்குனர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்தில், நடிகர்கள் சத்யராஜ் , சூரி , சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன் , ஸ்ரீமன் ,இளவரசு , சரவணன் , மாரிமுத்து , ஜான் விஜய் , சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார் , வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில், எடிட்டராக ரூபனும் , சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்ராயன் , கலை இயக்குநர் வீரசமர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.