இதை எதிர்பார்த்தால் அண்ணனிடம் அடிதான் கிடைக்கும்... சூர்யா பற்றி கூறிய கார்த்தி...!

Asianet News Tamil  
Published : Jun 12, 2018, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
இதை எதிர்பார்த்தால் அண்ணனிடம் அடிதான் கிடைக்கும்... சூர்யா பற்றி கூறிய கார்த்தி...!

சுருக்கம்

actor karthi about her brother surya jolly talk

2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் , படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சூர்யா , நாயகன் கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் , இயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ் , சூரி , சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன் , ஸ்ரீமன் ,இளவரசு , சரவணன் , மாரிமுத்து , ஜான் விஜய் , சௌந்தர்ராஜன் , இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் , எடிட்டர் ரூபன் , சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்ராயன் , கலை இயக்குநர் வீரசமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் கார்த்தி பேசியது:- கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாக தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்து தான் சரியாக செய்து முடித்தார். இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. 

பட்டினத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளது. நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடிதான் கிடைக்கும் என்று தன்னுடைய அண்ணன் சூர்யா பற்றி காமெடியாக பேசினார் கார்த்தி. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dushara Vijayan : ஜில் பனியில் கூலாகும் துஷாரா விஜயன்... இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
Malavika Mohanan : பார்த்தாலே கிக்!! இறக்கமான சுடிதாரில் மாளவிகா மோகனின் நச் போஸ்..