குடும்ப நண்பரான புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு கதறிய சூர்யா....

manimegalai a   | Asianet News
Published : Nov 05, 2021, 05:42 PM ISTUpdated : Nov 05, 2021, 05:53 PM IST
குடும்ப நண்பரான  புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு கதறிய சூர்யா....

சுருக்கம்

ஒரு வாரம் கழித்து மறைந்த  கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

கன்னட திரையுலகை ஆட்சி செய்து வந்த சூப்பர் ஹீரோ புனித் ராஜ்குமார். 46 வயதை கடந்தும் இளமையுடன் இருந்த புனித் உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தவர். ஸ்டண்டுக்கு இணையான அவ்வாறு கடந்த 29-ம் தேதி உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது நடிகர் புனித் ராஜ்குமாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட புனித் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரின் மரணம்  திரை  உலகினர் ரசிகர்கள் என அனைத்து தரப்பினரையும் கலங்கடிக்க செய்தது.

அவரது மறைவிற்கு பிறகே புனித்தின் தியாக உள்ளம் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது. அனாதை இல்லம், முதியோர் இல்லம், கல்வி அறக்கட்டளை என நிஜ வாழ்விலும் நயகனாக வாழ்ந்த புனித் ராஜ்குமாரின் இறுதி அஞ்சலி லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்திற்கு இடையே மிதந்து சென்றது. அரசு மரியாதையுடன் புனித் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புனித் உடலுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராணா டகுபதி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் பிரபுதேவா, அர்ஜுன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதற்கிடையே நேரில் அஞ்சலி செலுத்தாத தமிழ் ஹீரோக்களை விமர்சித்து கன்னட ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். பின்னர் நடிகர் சிசிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தனர்.

அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா  கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள புனித்தின் நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா ;  தனது குடும்பமும் புனித்தின்  குடும்பமும் ஆரம்பகாலத்திலிந்து நெருக்கமான நண்பர்கள் என்றும்.  தன் தாயின் வயிற்றில் 4 மாத கருவாக இருந்தபோது அவரும் அவரது தாயார் வயிற்றில் 7 மாத கருவாக இருந்ததாக சூர்யாவின் தாய் கூறியதாக தெரிவித்துள்ளார். எப்போதும் சிரித்த முகத்துடனே இருக்கும் புனித், ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார். அவரது மரணம் நடந்திருக்க கூடாத ஒன்று. புனித் மரணத்தை இதுவரை தன்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என கூறியுள்ள சூர்யா, அவர் மரணமடையவில்லை நம்முடனே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு மனவலிமையை கொடுக்க வேண்டுகிறேன்’’ என பேட்டியளித்துள்ளார்.. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!