
இறுதி சுற்று படத்தை இயக்கிய, பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்ககத்தில், நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. தற்போது சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து, 'காட்டு பயலே' என்கிற ரொமான்டிக் பாடலை வெளியிட்டுள்ளார் படக்குழுவினர்.
கொரோனா பிரச்சனை காரணமாக அணைத்து சினிமா பணிகள் முடங்கினாலும் , அரசு தரப்பில் சமூக இடைவெளியை கடைபிடித்து செய்ய கூடிய, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு சில தளர்வுகள் கொடுக்கப்பட்டு, மீண்டும் பணிகள் துவங்கியது. இதனால் சூரரை போற்று படத்தில் சொச்சம், மிச்சம் இருந்த அந்த பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது. எனவே மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று தகவல் வெளியான நிலையில் கொரோனா பிரச்சனை முடிவுக்கு வருவதை பொறுத்தே திரையரங்கங்கள் திறக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இந்நிலையில் இப்படம் சென்சாரில் ’யு’ சான்றிதழ் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ’சூரரைப்போற்று’ திரைப்படம் திரையிடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட கோரி ரூபாய் 55 கோடி வரை கேட்டும், சூர்யா தன்னுடைய ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்கில் தான் பார்க்க வேண்டும் என கூறி கறாராக மறுத்து விட்டாராம். காரணம் இந்த படத்தின் கதை மீது அவர் வைத்துக்கும் நம்பிக்கை என்றே கூறப்படுகிறது.
தற்போது படத்தை பார்க்க வாய்ப்பில்லை என்றாலும், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை 23 , அதாவது இன்று, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்டு பயலே என்கிற பாடல் வெளியாகும் என அறிவித்தனர். அதன்படி தற்போது இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான வெய்யோன் சில்லி பாடல் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள பாடல் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.