நாட்டையே உலுக்கிய... கேரள தங்க கடத்தல் கும்பலுடன் உதயநிதி ஸ்டாலின் பட தயாரிப்பாளருக்கு தொடர்பா?

By Kanimozhi PannerselvamFirst Published Jul 22, 2020, 6:44 PM IST
Highlights

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தை தயாரித்தவரும்  இவர் தான். 

திருவனந்தபுரத்தில் ஐக்கிய அமீரக தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட பார்சல் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சோதனையிடப்பட்டது. அப்போது அந்த பார்சலில் ரூ.15 கோடியில் 30 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டது. இந்த விவகாரம் கேரளாவை மட்டுமல்ல, நாட்டையே உலுக்கியது. கடத்தலில் கேரள அரசின் தகவல் தொடர்பு துறை மேலாளர் ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக காங்கிரஸ் கட்சிகள் போர் கொடி தூக்கியது. முதல்வர் பினராய் விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் பேசப்பட்டது.

இதையும் படிங்க: நீச்சல் உடையில் தமன்னா... இதுவரை யாரும் பார்த்திடாத ஹாட் போட்டோ... செம்ம வைரல்...!!

கடந்த இரண்டு வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த வழக்கில் பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. மலையாளத்தில் டொவினோ தாமஸ் - ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரை வைத்து மாயநதி என்ற படத்தை தயாரித்தவர் சந்தோஷ் டி குருவில்லா, இவர் அந்த படத்தை தயாரிக்க தங்க கடத்தல் கும்பலிடம் இருந்து பணம் பெற்றதாக தகவல்கள் வெளியாகின. 

 

இதையும் படிங்க: கையில் மதுக்கோப்பையுடன் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் வனிதா... தீயாய் பரவும் போட்டோ...!

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நிமிர் படத்தை தயாரித்தவரும்  இவர் தான். தங்க கடத்தல் கும்பலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சந்தோஷ் டி குருவில்லா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், "இந்த படத்திற்காக செலவு செய்த ஒவ்வொரு காசுக்கும் தன்னிடம் முறையான கணக்கு மற்றும் வங்கி பரிவர்த்தனை விவரங்கள் இருப்பதாகவும், முறையாக வரி கட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இதில் என்னை கோர்த்துவிட்டது யார் என்று தெரியவில்லை என்றும், இதனால் அந்த நபருக்கு என்ன லாபம் என புரியவில்லை" எனவும் கவலை தெரிவித்துள்ளார். 
 

click me!