வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள - கர்நாடக மக்களுக்கு முதல் ஆளாக ஓடிவந்து உதவும் சூர்யா - கார்த்தி! குவியும் வாழ்த்து!

By manimegalai aFirst Published Aug 15, 2019, 6:10 PM IST
Highlights

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே, சில வருடங்களாகவே தொடர்ந்து சமூக பணிகளில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். அந்தவகையில் 'அகரம் பவுண்டேஷன்' மூலம், ஏழ்மை நிலையால் படிப்பை தொடர முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் நடிகர் சூர்யா.
 

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே, சில வருடங்களாகவே தொடர்ந்து சமூக பணிகளில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். அந்தவகையில் 'அகரம் பவுண்டேஷன்' மூலம், ஏழ்மை நிலையால் படிப்பை தொடர முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் நடிகர் சூர்யா.

நடிகர் கார்த்தியும், விவசாய தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு அமைப்பு ஒன்றை துவங்கி உள்ளார். இவை அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், சமூக பிரச்சனைகள், மற்றும் இயற்கை சீரழிவுகளுக்கும்,  தங்களால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அந்தவகையில் கேரளாவின் வடக்கு பகுதியில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால் மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.  பலத்த மழை பெய்து அதன் விளைவாக கேரளாவில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், என அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  நிலச்சரிவு மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் பலர் வீடு உடமைகளை இழந்துள்ளனர்.

இதுவரை கேரளாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 102 பேர் உயிர் இழந்துள்ளனர்.  மேலும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் மீட்புப் பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. பலர் மண் மூடிய வீடுகளில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மழை பாதித்த இடங்களை பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி தொகையை அறிவித்ததோடு, மீட்பு பணிகளை தீவிர படுத்தியுள்ளார். 

அதே போல் தற்போது கர்நாடகாவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும், நடிகர் சூர்யா மற்றும் அவருடைய சகோதரர் கார்த்தி ஆகிய இருவரும், முதல் ஆளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, கேரள மற்றும் கர்நாடக மக்களுக்கு 10 உதவி தொகையை அறிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் இருவருக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

click me!