நின்னா குத்தமா... நடந்த குத்தமா... சிரிச்சா குத்தமா...? சோகத்திலும் லாஸ்லியாவை விட்டு கொடுக்காத ஆண் போட்டியாளர்கள்!

Published : Aug 15, 2019, 05:23 PM ISTUpdated : Aug 15, 2019, 05:24 PM IST
நின்னா குத்தமா... நடந்த குத்தமா... சிரிச்சா குத்தமா...?  சோகத்திலும் லாஸ்லியாவை விட்டு கொடுக்காத ஆண் போட்டியாளர்கள்!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில், வனிதா நுழைந்ததில் இருந்து பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே அபிராமி - முகேனுக்கு இடையே சண்டை வெடித்தது. இதனால் இவர்கள் இருவருமே, ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசுவதற்கு கூட தயக்கம் காட்டும் நிலை உருவாகி விட்டது.  

இதை தொடந்து நேற்றைய தினம், ஏற்கனவே நடந்து முடிந்த கவினின் நான்கு காதலி பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. ஒரு தரப்பினர் மதுமிதா கேட்ட கேள்விகள் நியாயமானவை என்று கூறினாலும், நடந்து முடிந்த பிரச்சனைகளை ஏன் பேச வேண்டும் என்பது மற்றொரு தரப்பினரின் கேள்வியாகவும் உள்ளது.

இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக இருந்த போது, எப்படி தன்னுடைய குரலை உயர்த்தி பேசினாரா வனிதா, அதே போல் இப்போது வரும் ஒரு புதிய பிரச்சனைக்கும் குரலை உயர்த்து தர்ஷனிடம் சண்டைக்கு சீறும் காட்சிகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், பாடல் மூலம் பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் கூறுகிறார் முகேன். இவருடன் சேர்ந்து தர்ஷன், சாண்டி, கவின், லாஸ்லியா என அனைவரும் பாடுகிறார்கள்.

இந்த பாடலில் "சமாதானம் பேச வந்தால் பழைய குப்பையை அல்லுறீங்க... ஆண் எண்ணாக பெண் எண்ணாக இங்க எல்லாருமே ஓரினம்... நின்னா குத்தமா... நடந்த குத்தமா... சிரிச்சா குத்தமா என அடுக்கு வசனங்களை போட்டு சுவாரஸ்யத்தை ஏற்றி உள்ளனர். மேலும் தங்களுக்கு துணையாக உள்ளது, ஒரு பெண்ணுதான் என லாஸ்லியாவிற்காகவே பாடியுள்ளார். எல்லாரையும் குத்தம் சொல்லி லாஸ்லியாவிற்கு மட்டும் சப்போர்ட் செய்துள்ளனர் ஆண் போட்டியாளர்கள் என்பது இந்த பாடலில் இருந்து தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?