’இப்பிடியாங்க ட்விட் போடுவாங்க?’...சிம்பு ரசிகர்களை சூடாக்கிய இயக்குநர் வெங்கட் பிரபு...

Published : Aug 15, 2019, 05:44 PM IST
’இப்பிடியாங்க ட்விட் போடுவாங்க?’...சிம்பு ரசிகர்களை சூடாக்கிய இயக்குநர் வெங்கட் பிரபு...

சுருக்கம்

சிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியின் ‘மாநாடு’படம் டிராப்பாகி, அடுத்து ஸோலோ சிம்புவின் ‘மகா மாநாடு’குறித்த கூவல்கள் அதிகரித்து வரும் நிலையில் தனது முன்னாள் ஹீரோவுக்கு ட்விட்டர் பக்கத்தில் ஒரு செமத்தியான அட்வைஸ் செய்துள்ளார் வெங்கட் பிரபு.  

சிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியின் ‘மாநாடு’படம் டிராப்பாகி, அடுத்து ஸோலோ சிம்புவின் ‘மகா மாநாடு’குறித்த கூவல்கள் அதிகரித்து வரும் நிலையில் தனது முன்னாள் ஹீரோவுக்கு ட்விட்டர் பக்கத்தில் ஒரு செமத்தியான அட்வைஸ் செய்துள்ளார் வெங்கட் பிரபு.

சிம்புவை படத்திலிருந்து நீக்கியதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே தான் தயாரிப்பாளர் பக்கம் நிற்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்திருந்தார்.அதை தொடர்ந்து எமோஷ்னல் ட்விட் ஒன்றை போட்ட வெங்கட் பிரபு,... மாநாடு' படத்தில் சகோதரர் சிம்புவுடன் பணியாற்ற முடியவில்லை என்பது, உண்மையில் வருத்தமாக உள்ளது. அதே நேரத்தில், தயாரிப்பாளரின்,  பொருளாதார நிலை மற்றும் பிற விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. தயாரிப்பாளர் எடுத்த இந்த முடிவுக்கு நான் உடன்படுகிறேன்' என்று கூறியிருந்தார்.

அடுத்து வெங்கட் பிரபு குறித்து எதுவும் நெகடிவான கருத்துக்களை வெளியிடாத சிம்பு தரப்பு தயாரிப்பாளரை தொடர்ந்து வம்பிழுத்து வந்தது. சிம்புவின் அம்மா பெயரில் தயாரிப்பாளரை டேமேஜ் பண்ணி ஒரு அறிக்கை கூட வெளியிடப்பட்டது. சிம்புவின் சில ரசிகர்கள் ‘மாநாடு’படத்தை விட ‘மகா மாநாடு’பயங்கரமாக வரப்போகிறது என்று கூவத் தொடங்கினர். இந்நிலையில் இன்று சுதந்திர தின வாழ்த்துகள் சொல்கிறேன் பேர்வழி என்ற பெயரில் ஒரு ட்விட் வெளியிட்ட வெங்கட் பிரபு,...venkat prabhu

@vp_offl
 வம்பை வளர்க்காமல் 
அன்பை வளர்ப்போம்
வந்தே மாதரம் #JaiHind என்று சுற்றி வளைக்காமல் சிம்புவுக்கு ஒரு செய்தி போட்டிருக்கிறார். இதைக் கண்டு சிம்பு ரசிக சிகாமணிகள் ரத்தம் சூடாகியுள்ளனர்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பான் இந்தியா நடிகருக்கு கன்னத்தில் பளார் விட்டாரா பூஜா ஹெக்டே? உண்மை பின்னணி என்ன?
எஸ்கே ரசிகர்களை சீண்டியதா ஜீவாவின் பேச்சு? - சாக்லேட் பாயின் 'சரவெடி' பேட்டியால் எழுந்த சர்ச்சை!