நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா, ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்த வீடியோ வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ஜோதிகா, சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். திருமணத்துக்கு பின்னர் சுமார் 7 ஆண்டுகளாக சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்த ஜோதிகா, பின்னர் 36 வயதினிலே படம் மூலம் கோலிவுட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அவர் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
எந்த முன்னணி நடிகரின் படமாக இருந்தாலும் தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் நோ சொல்லிவிடுவார் ஜோதிகா. இதற்கு விஜய்யின் மெர்சல் மற்றும் கோட் படங்களே உதாரணம். இந்த இரண்டு படங்களிலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். தன்னுடைய கேரக்டர் படத்தில் ஸ்ட்ராங் ஆக இல்லாததால் அவர் இந்த முடிவை எடுத்தாராம்.
இதையும் படியுங்கள்... கமல் கிடையாது.. சஞ்சய் தத் கிடையாது.. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் இவர்தான்..
தற்போது நடிகை ஜோதிகாவுக்கு 45 வயதாகிறது. இந்த வயதிலும் இளமை குறையாமல் நடிகை ஜோதிகா யங் லுக்கில் இருப்பதற்கு காரணம் அவரின் பிட்னஸ் தான். நடிகர் சூர்யாவை போல் ஜோதிகாவும் பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஜிம்மிற்கு ரெகுலராக சென்று ஒர்க் அவுட் செய்வதை வழக்கமாக வைத்துள்ள ஜோதிகா, தற்போது தான் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபோது எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் நடிகை ஜோதிகா கிராஸ் பிட் ஒர்க் அவுட்டுகளை அசால்டாக செய்வதை பார்த்து நெட்டிசன்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். மேலும் திரைப்பிரபலங்களும் ஜோதிகாவின் ஒர்க் அவுட் வீடியோவுக்கு ஃபயர் விட்டு வருகின்றனர். ஜோதிகா பதிவிட்ட அந்த வீடியோ 12 மணிநேரத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதோடு அதற்கு 2 லட்சத்திற்கு மேல் லைக்குகளும் குவிந்துள்ளன.
இதையும் படியுங்கள்... ஒரு பைசா கூட வருமானம் வரல... என்னையும் ஏ.ஆர்.ரகுமானையும் ஏமாத்திட்டாங்க...! சந்தோஷ் நாராயணன் பரபரப்பு புகார்