
ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை சத்யபிரியா. 1974-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், 1975 ஆம் ஆண்டு 'மஞ்சள் முகமே வருக' என்கிற படத்தின் மூலம், தமிழில் காலடி எடுத்து வைத்தார். இதைத்தொடர்ந்து முன்னிரவு நேரம், பேரும் புகழும், என்ன தவம் செய்தேன், பைலட் பிரேம்நாத், கண்ணன் ஒரு கைக்குழந்தை, பணக்காரன், சூரிய வம்சம் போன்ற ஏராளமான தமிழ் படங்களில், முன்னணி நடிகர்களுக்கு அம்மா, மாமியார், வில்லை என பல கேரக்டரில் நடித்துள்ளார்.
இவருக்கு அழகும், திறமையும் இருந்தும்... ஏனோ ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தார். அதேபோல் ஹிந்தி, தமிழ், மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்து பிரபலமானார். என் எஸ் முகுந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சத்யபிரியா, திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சுமார் 50 வருடங்களாக, 350 தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ள சத்யபிரியா தமிழில் ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக கோலங்கள், சாந்தி நிலையம், வம்சம், கல்யாண பரிசு, ரன், நீதானே என் பொன்வசந்தம், போன்ற சீரியல்கள் இவரை தனித்துவமாக காட்டியது. இதைத்தொடர்ந்து தற்போது சன் டிவியில் இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல்' தொடரில் விசாலாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சத்யபிரியா நேற்று தன்னுடைய 74 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு சீரியல் குழுவினர், இவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் அவருக்கு கேக் வெட்டி செலபிரேட் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.