நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா, தேர்தலில் போட்டியிட தனக்கு ஒரு அரசியல் கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மை தான் என கூறி இருக்கிறார்.
நடிகர் சத்யராஜுக்கு சிபி என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் சிபி சத்யராஜ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். மறுபுறம் சினிமா பக்கமே தலைகாட்டாமல் உள்ள சத்யராஜின் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். அவர் அரசியலில் குதிக்க உள்ளதாக தொடர்ந்து செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ள நிலையில், அதுபற்றி அவரே ஓப்பனாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த அறிக்கையில் சத்யராஜ் மகள் திவ்யா குறிப்பிட்டுள்ளதாவது : “வணக்கம்! எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என்று சில பத்திரிக்கை நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். அதற்குப் பிறகு எல்லோரும் என்னைக் கேட்கும் கேள்விகள் "நீங்கள் எம்.பி ஆவதற்காக அரசியலுக்கு வருகிறீர்களா? ராஜ்யசபா எம்.பி ஆகனும்கற ஆசை இருக்கா? மந்திர பதவி மேல் ஆர்வம் உள்ளதா? சத்யராஜ் சார் உங்களுக்குப் பிரச்சாரம் செய்வாரா?" இப்படிப் பல கேள்விகள். நான் பதவிக்காகவோ, தேர்தலில் வெல்வதற்காகவோ அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கவில்லை.
இதையும் படியுங்கள்... என் செல்லத்துக்கு ஹாப்பி பர்த்டே... சரத்குமார் மகள் வரலட்சுமி மீது பாசமழை பொழிந்த ராதிகா - வைரலாகும் வீடியோ
மக்களுக்காக வேலை செய்வதற்காகத் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன். நான் களப்பணிகள் செய்ய ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிறது. 'மகிழ்மதி இயக்கம்' என்ற அமைப்பை மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்தேன். அந்த அமைப்பின் மூலம் தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம்: நான் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், எந்த ஒரு மதத்தைப் போற்றும் கட்சியுடனும் இணைய எனக்கு விருப்பம் இல்லை. எந்தக் கட்சியுடன் இணையப் போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன். புரட்சித் தமிழன், தோழர் சத்யராஜ் அவர்களின் மகளாகவும், ஒரு தமிழ் மகளாகவும், தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன்” என்று ஒப்பனாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... தென் மாவட்டம் படத்துக்கு இசையமைக்கவில்லை என்று அறிவித்த யுவன்... ஆதாரத்தை காட்டி அதிரவிட்ட ஆர்.கே.சுரேஷ்