'சூரரை போற்று' படத்திற்காக பார்சலில் வந்த விருது..!! பரவசம் அடைந்த சூர்யா - ஜோதிகா!! கொண்டாட்ட வீடியோ இதோ...

Published : Sep 05, 2021, 03:14 PM IST
'சூரரை போற்று' படத்திற்காக பார்சலில் வந்த விருது..!! பரவசம் அடைந்த சூர்யா - ஜோதிகா!! கொண்டாட்ட வீடியோ இதோ...

சுருக்கம்

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்ற நடிகர் சூர்யாவிற்கு, அந்த விருது பார்சலில் வந்த போது, தன்னுடைய மனைவியுடன் அவர் அதனை பிரித்து பார்த்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்ற நடிகர் சூர்யாவிற்கு, அந்த விருது பார்சலில் வந்த போது, தன்னுடைய மனைவியுடன் அவர் அதனை பிரித்து பார்த்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்த சூரரைப் போற்று திரைப்படம்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. 

உலக அளவில் கிடைத்த அங்கீகாரமாக ஆஸ்கர் விருதின் பொதுப்பிரிவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டதாக ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களின் பட்டியலிலும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றிருந்தது. ஆனால் இறுதிப்பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 

இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் பிரிவில் ‘சூரரைப் போற்று’ பட இயக்குநர் சுதா கொங்கராவின் பெயரும், சிறந்த நடிகர் பிரிவில் சூர்யா பெயரும் பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து 26 மொழிகளில் கிட்டதட்ட 100 படங்கள் இங்கு திரைப்பட உள்ளது. இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருது சூரரைப் போற்று படத்திற்கும் அறிவிக்கப்பட்டது.

தற்போது கொரோனா காலம் நீடித்து வருவதால், அனைவரது பாதுகாப்பு கருதி, விருது கொடுப்பதற்கு விழா நடத்தாமல், பிரபலங்களுக்கு இந்த விருதுகளை பார்சலில் அனுப்பி வருகிறார்கள். அந்த வகையில் 'சூரரை போற்று' படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற சூர்யா இந்த விருதை தன்னுடைய மனைவியுடன் பிரித்து பார்க்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய கணவரை ஜோதிகா கரகோஷம் எழுப்பி உத்சாக படுத்துகிறார். மேலும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை சூர்யாவுக்கு தெரிவித்து வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நயன்தாரா விவகாரம்.. சி.வி.சண்முகத்துக்கு எதிராக கொதித்தெழுந்த நடிகர் சங்கம்.. பரபரப்பு அறிக்கை!
நாள் முழுவதும் மதுவில் மூழ்கிய ஊர்வசி? பயில்வான் ரங்கநாதன் சொன்ன அந்த அதிர்ச்சி விஷயம்! இணையத்தில் வைரலாகும் தகவல்!