நான் சிகரெட் பிடிச்சதே இல்ல; பாலாவுக்காக முதல் முறையாக சிகரேட் பிடிச்சேன்: வணங்கானில் சூர்யா!

By Rsiva kumar  |  First Published Dec 18, 2024, 11:28 PM IST

Suriya Smoked 300 Times for Bala at Vanangaan Audio Launch :  சிகரெட் பிடிச்சதே இல்லை, அப்படியிருக்கும் போது பாலாவுக்காக 300 முறை சிகரெட் பிடிச்சதாகவும் வணங்கான் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கூறியுள்ளார்.


வணங்கான் படத்தில் சூர்யா நடிக்க வேண்டியது. கதையில் மாற்றம் செய்யக் கோரிய நிலையில் சூர்யா மற்றும் பாலா இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா வணங்கான் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து அருண் விஜய்யை வைத்து பாலா வணங்கான் படத்தை எடுத்து முடித்து ரிலீஸுக்கும் கொண்டு வந்து விட்டார். வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வணங்கான் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் தான் இயக்குநர் பாலா சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் கடந்த நிலையில் சென்னையில் வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், படக்குழுவினர் உள்பட சிவகார்த்திகேயன், இயக்குநர் மணிரத்னம், சூர்யா மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது பேசிய சூர்யா வணங்கான் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படம். இந்தப் படத்தை பார்த்து இன்னொரு தலைமுறை நிறைய கற்றுக் கொள்ளும் என்று நான் நினைக்கிறேன். எனக்கு சிகரெட் பிடிக்கவே தெரியாது. அப்படியிருக்கும் போது நந்தா பட ஷூட்டிங்கில் தான் நான் முதல் முறையாக சிகரெட் பிடிச்சேன். அதுவும் 300 முறை சிகரெட் பிடிச்சு பழகினேன். அன்று நந்தா படத்திற்காக பழகியது இன்று ரோலக்ஸ் படம் வரையில் யூஸ் ஆகுது. நந்தா படம் இல்லை என்றால் காக்க காக்க படம் இருந்திருக்காது. காக்க காக்க படம் இல்லை என்றால் வாரணம் ஆயிரம் படம் இருந்திருக்காது. என்னை கண்டுபிடித்து தமிழில் நம்பிக்கைக்குரிய திறமைசாலியாக அறிமுகப்படுத்தியதற்கு பாலா சாருக்கு நன்றி.

சேது படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம். இப்படி ஒரு இயக்குநர் இருக்க முடியுமா அல்லது ஒரு நடிகரால் தான் இப்படி நடிக்க முடியுமா என்று எனக்குள் 100 நாள் அந்த கேள்வி இருந்தது. ஒரு 24 வருடங்களுக்கு முன்பு நெய்க்காரன்பட்டியில் ஷூட்டிங்கில் இருந்த போது எனக்கு ஒரு போன் வந்தது. அதில், என்னோட அடுத்த படத்தில் நீ தான் ஹீரோ என்று பாலா சொன்னது எல்லாவற்றையும் மாற்றிக் காட்டியது என்றார்.

இந்நிகழ்ச்சியின் போது நடிகர் சிவக்குமார் மற்றும் சூர்யா இணைந்து பாலாவின் 25 ஆண்டுகால சினிமா பயணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தங்க சங்கிலியை பரிசாக அணிவித்தனர். இந்நிகழ்ச்சியின் பேசிய இயக்குநர் பாலா கூறியிருப்பதாவது: நான் சூர்யா முன்பு சிகரெட் குடிக்கவே மாட்டேன். ஏனென்றால் என்னை விட என் மீது அதிக அக்கறை கொண்டவர். அதனால், அவர் முன்பு நான் சிகரெட் குடிக்கவே மாட்டேன். சூர்யா என்னுடைய தம்பி. நான் செய்யும் தவறுகளை என்னிடம் சொல்லக் கூடியவர் என்று கூறியுள்ளார்.

click me!