
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, புதிதாக நடத்தப்படும் ஐஎஸ்பிஎல் என்னும் டி10 கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை வாங்கி இருக்கிறார். இந்த தொடரின் முதல் சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மட்டுமின்றி மும்பை, ஐதராபாத், ஸ்ரீநகர், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த ஆறு அணிகளையும் சினிமா பிரபலங்கள் தான் வாங்கி இருக்கின்றனர்.
அதன்படி சென்னை அணியை சூர்யாவும், ஐதராபாத் அணியை ராம்சரணும், மும்பை அணியை அமிதாப் பச்சனும், ஸ்ரீநகர் அணியை அபிஷேக் பச்சனும், பெங்களூரு அணியை ஹிருத்திக் ரோஷனும் வாங்கி உள்ளனர். இந்த தொடரை பிரபலப்படுத்தும் விதமாக நேற்று சினிமா பிரபலங்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கு இடையேயான பிரெண்ட்லி மேட்ச் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடிய சச்சின், நடிகர் சூர்யா, ராம் சரண் – வைரலாகும் வீடியோ!
இதில் கிரிக்கெட் பிரபலங்கள் அணியில் சூர்யா, அக்ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் இடம்பெற்று இருந்தனர். அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் அணியில் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், முனாப் பட்டேல் உள்ளிட்டோர் இடம்பிடித்து இருந்தனர். இதில் முதலில் ஆடிய கிரிக்கெட் வீரர்கள் அணி பத்து ஓவரில் 94 ரன்கள் குவித்து இருந்தது.
இதையடுத்து விளையாடிய அக்ஷய் குமார் தலைமையிலான கில்லாடி லெவன் அணியில் நடிகர் சூர்யா களமிறங்கும் போது சச்சின் டெண்டுல்கர் பந்துவீசினார். அப்போது சச்சின், ரெய்னா போன்ற ஜாம்பவான் நடிகர்களின் பந்துவீச்சை பதம் பார்த்த சூர்யா, இறுதியாக முனாப் பட்டேலின் வேகத்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். சூர்யா கிரிக்கெட் விளையாடிய வீடியோக்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகின்றன. இந்தப் போட்டியை காண சூர்யாவின் மகன் தேவ் மற்றும் மகள் தியா ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் சுரேஷ் ரெய்னா உடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
இதையும் படியுங்கள்... சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கினார் நடிகர் சூர்யா.... வெளியான அசத்தல் அறிவிப்பு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.