
இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’. இதில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில், பாடல்கள் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இதற்கிடையில், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் மூட்டை கட்டி வைக்கப்பட்டன. இதனால், திரைத்துறையை சேந்த பலரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ஊரடங்கில் தளர்வு அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையேற்று ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அயலான் படத்தின் சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன.
இறுதிகட்ட காட்சி சமீபத்தில் முடிவடைந்தது. படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்ததை தொடர்ந்து, அதன் இறுதிக்கட்ட பணியில், படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, படத்தில் அதிகளவு கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதால், அதன் அடுத்தகட்ட பணிகளில் களம் இறங்கியுள்ளனர்.
அதற்கடுத்து, ரவிக்குமார், சூர்யாவிடம் கதை கூறியுள்ளாரம். அந்த கதை 50 வருடம் கழித்து வருங்கால உலகத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். சூர்யாவிற்கு அந்த கதை பிடித்துவிட்டதாம். அதற்கான முன் பணிகள் மட்டுமே 1 வருடம் நடக்குமாம். இந்த படத்திலும் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.