Siddharth apology : மன்னிப்பு கேட்ட சித்தார்த்... கடவுள் பார்த்துகொள்வார்... சாய்னா விடுத்த எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Jan 12, 2022, 12:14 PM IST
Highlights

ஒரு பெண்ணை இவ்வாறு குறிவைத்து தாக்கக் கூடாது. பெண்களை இதுபோன்று வசைபாடக்கூடாது

சித்தார்த் மன்னிப்பு கேட்டுவிட்டார். சாய்னா நேவால் அதனை ஏற்றும் கொண்டுவிட்டார். ஆனாலும் இந்த விவகாரம் இப்போதைக்கு ஓயாது போலவே தெரிகிறது. 

பெரோஸ்பூர் மாவட்டத்தில் நடைபெற விருந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி சாலை வழியாக காரில் சென்றார். அவருடன் பாதுகாப்பு வாகன அணிவகுப்பும் சென்றது. ஆனால் வழியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரதமர் கார் நிறுத்தப்பட்டது.

 

அதனைத்தொடர்ந்து வாகன அணிவகுப்பும் தொடர முடியவில்லை. 20 நிமிடங்கள் காத்திருந்தும் நிலையில் மாற்றம் இல்லை. இதனால் பிரதமர் மோடி அங்கிருந்து திரும்பினார். அவரது நிகழ்ச்சிகளும் ரத்தாகின. பிரதமரின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி விவகாரம் பெரும் சர்ச்சையாகி சூடுபிடித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பிலேயே சமரசாமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன்’ என தெரிவித்தார்.  

சாய்னா நேவாலின் டுவிட்டர் பதிவிற்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த், "உலகின் நுட்பமான சேவல் சாம்பியன். கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியா பாதுகாப்பாகத்தான் உள்ளது. வெட்கப்படுகிறோம்" என்று பதிவிட்டார் . அதனைத்தொடர்ந்து நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவு ஆபாசமாக இருப்பதாக கூறி பல்வேறு தரப்பிலும் கண்டனக்குரல்கள் எழுந்தன. பெண் என்றும் பாராமல் சாய்னா நேவாலை நடிகர் சித்தார்த் தரக்குறைவாக விமர்சித்ததாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்தது.

இதனையடுத்து மன்னிப்பு கேட்ட சித்தார்த், மூர்க்கத்தனமான டுவிட்டிற்கு மன்னிப்புக்கோருகிறேன். நகைச்சுவையை பொறுத்தவரை புரிந்துகொள்ளக்கூடியதாக நகைச்சுவை இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அது நகைச்சுவையல்ல. சரியாக புரிந்துகொள்ள முடியாதபடியாக நான் பதிவிட்ட நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன். இந்த விவகாரத்தை விட்டுவிட்டு எனது இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். நீங்கள் எப்போதும் எனது வெற்றியாளர் தான்’ என நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

இதனை ஏற்றுக் கொள்வதாக சாய்னா நேவாலும் பதிலளித்துள்ளார். ‘’உங்கள் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு பெண்ணை இவ்வாறு குறிவைத்து தாக்கக் கூடாது. பெண்களை இதுபோன்று வசைபாடக்கூடாது, ஆனால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி. சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும். சித்தார்த் கூறியது ஏன் வைரலானது என எனக்கே தெரியவில்லை. அதைக்கண்டு ஆச்சர்யமடைந்தேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.  

சித்தார்த் உங்க சித்தாந்தம் கடைபிடிக்கிறார் என்பதற்காக இந்த பதிவா?
சாய்னா இந்திய நாட்டிற்கு பதக்கங்கள் வாங்கி தந்த வீராங்கனை
அவரது ட்விட் பிரதமர் மோடி பாதுகாப்பு குறைப்பாடு இருந்தது பதிவுசெய்தார்
இந்த🐷
மோடி ஜீ எதிராகவும் சாய்னா மீது வன்மத்தை கொட்டி இருக்கான்

— Manikandan .k (@Mani7mani1994)

 

வெறும் மன்னிப்போடு இதை கடந்துவிட முடியாது. முன்னர் சக நடிகை, பெண் பத்திரிக்கையாளர், அரசியலில் உள்ள பெண்கள் உட்பட பலர் மீதும் இப்படி தரம் தாழ்ந்த தாக்குதல்களை தொடுத்துள்ளார். ஆகையால் அவர் மீது நடவடிக்கை பாயும் என்றே கூறப்படுகிறது.

click me!