
பழம்பெரும் நடிகர் சிவகுமார் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், சினிமா விழாக்கள், புத்தக வெளியீடு போன்றவற்றில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், அரசியல்வாதியும், தயாரிப்பாளருமான பழ. கருப்பையா எழுதிய நூல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பழம்பெரும் நடிகர் சிவகுமார், பழ. கருப்பையா பற்றி மிகவும் பெருமையாக பேசினார். குறிப்பாக, குடிநீரை பாதுகாக்க பழ.கருப்பையா எடுத்து நடவடிக்கை, முன்னெடுத்த போராட்டங்கள் பற்றி பேசினார்.
மேடையில் பேசி கொண்டிருக்கும் போதே தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு, பழ.கருப்பையா காலில் சிவகுமார் விழுந்தார். 82 வயதாகும் சிவகுமார், 80 வயதாகும்... அதாவது தன்னை விட சிரியவரான பழ.கருப்பையா காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து விழா முடிந்ததும், அங்கிருந்து புறப்பட்ட சிவகுமாருக்கு, வயதான முதியவர் ஒருவர் முகம் நிறைந்த சிரிப்புடன் நேரில் வந்து சால்வே அணிவிக்க முயன்ற போது... அதை திடீர் என வாங்கி அந்த சால்வேயை கீழே தூக்கி வீசினார். இவரது செயல் அங்கிருந்த பலருக்கு கோபத்தை தூண்டியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள்... உங்களுக்கு மனசாட்சியே இல்லையா என தூற்றி வருகின்றனர்.
பணம், பதவி, இருந்தால் அன்புடன் பேசும் நீங்கள்... ஏழைகள் தங்களால் முடிந்த ஒரு சிறு சால்வை கொண்டு வந்து புன்னகையோடு உங்களை அணுகினால் கூட இப்படி தான் அவமதிப்பீர்களா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே, இது போல் செல்போனை தூக்கி எறிந்த பிரச்சனை ஒன்றில் சிவகுமார் சிக்கிய நிலையில், தற்போது சால்வே பிரச்சனையில் சிக்கியுள்ளார். இதற்க்கு அவரது தரப்பில் இருந்து என்ன விளக்கம் கூறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.